தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாகக் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவருக்கு வயிற்று வலி மற்றும் அஜீரணம் போன்ற உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு வயிற்று தொடர்பான […]

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அருகே சாக்கடையில், அழுகிய நிலையில் சாக்கு மூட்டையில் கிடந்த ஆண் சடலம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சடலத்தை போலீசார் மீட்டனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சடலமாக மீட்கப்பட்டது மதுக்கரை, சீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பாலுசாமி என்பது தெரியவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற பாலுசாமி, வீடு திரும்பாததால் […]

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்றிரவு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.. மோப்ப நாய் உதவி உடன் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே சோதனையின் முடிவில் இது வெறும் புரளி […]

தருமபுரி மாவட்டம் தோக்கம்பட்டி பெருமாள் கோயில்மேடு பகுதியில், கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த 28 வயது பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்தின் பின்னணி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் ஒட்டப்பட்டியைச் சேர்ந்த கோமதி என்பதும், அவர் தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இவருக்கும் தருமபுரி டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) […]

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பல்வேறு தரப்பிலும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு, இது குறித்த தனது இறுதி அறிக்கையை வரும் செப்.30-ஆம் தேதி அரசுக்குச் சமர்ப்பிக்க உள்ளது. இந்த அறிக்கை வெளியான பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாறு […]

கடந்த 2011இல் நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகை சாந்தினி அந்தப் புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக மணிகண்டன் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில், நான் 3 முறை கர்ப்பமானேன். மேலும், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, ஒவ்வொரு முறையும் கருக்கலைப்பு செய்ய மணிகண்டன் வற்புறுத்தினார். ஆனால், திருமணம் செய்யாமல் […]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர், சினிமாவை தாண்டி அகரம் அறக்கட்டளை மூலம் மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். சூர்யாவிடம் அந்தோணி என்பவர் தனி பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது மாம்பலம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி ரூ.42 லட்சம் மோசடி செய்துவிட்டதாக கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய […]