Ramadoss has filed a complaint against Anbumani at the Police Commissioner’s Office
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
வேடசந்தூர் அருகே சுற்றுலா வேன் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பூசாரி கவுண்டன்பட்டியை சேர்ந்த 22 விவசாயிகள், ஆடி அமாவாசையை முன்னிட்டு கிடா வெட்டுவதற்காக ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள நாத்த்ராயன் கோயிலுக்குச் சுற்றுலா வேனில் புறப்பட்டனர். இந்த வேனை ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். […]
சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் (Home Health Alde) பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் […]
Will there be a solution to the coalition government dilemma? Edappadi Palaniswami to meet Prime Minister Modi..!!
தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக ஆகஸ்ட் 3, 4 ஆகிய நாட்களில் சென்னை பொது அஞ்சலகம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் சென்னை பொது அஞ்சலகத்தில் புதிதாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்ப மென்பொருள் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கையின்படி, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை, தடையற்ற, பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவதற்கு ஏதுவாக […]
தருமபுரி மாவட்டம் உழவன் கொட்டாய் அருகே கட்டுப்பாட்டை இழந்த காலாவதியான அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியதில், விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: தருமபுரி மாவட்டம் […]
நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகின்றன. இதன் காரணமாக இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், […]
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் அருகே எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி விபத்துக்குள்ளானது. இதில் கூடுவாஞ்சேரி நகராட்சி 24 ஆவது வார்டு திமுக செயலாளர் ராம் பிரசாத் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் அருகே எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, அரசுப் பேருந்து மீது மோதியது. மேலும் சாலையோரம் உள்ள […]
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் […]
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையாகும். இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக அடுத்த மாதம் 9-ம் தேதி சனிக்கிழமை அன்று வேலைநாள் என அம்மாவட்ட கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று […]

