திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 28 வயது சந்தியா என்ற இளம்பெண், கணவர் சிவா பெங்களூருவில் வேலை பார்த்ததால் தனியாக வசித்து வந்தார். இதை சாதகமாக்கிக் கொண்டு குமரேசன் மற்றும் விக்னேஷ் ஆகிய 2 ஆண்களுடன் சந்தியா கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். ஒரு நாள் இரவு, சந்தியாவின் வீட்டிற்கு வந்த குமரேசன், சந்தியாவுக்கு விக்னேஷுடன் தொடர்பு இருப்பது அறிந்து ஆத்திரமடைந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கோபமடைந்த குமரேசன், […]

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் மக்களை சந்திக்கும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்…. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் திருச்சி விமானம் சென்றடைந்தார்.. திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. விஜய் சுற்றுப்பயணத்திற்கு 21 நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது.. குறிப்பாக விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து 5 கார்கள் […]

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் மக்களை சந்திக்கும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் திருச்சி விமானம் சென்றடைந்தார்.. திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. விஜய்யின் பிரச்சார வாகனம் முன்பு கூடிய தொண்டர்கள் பூக்களை தூவி, மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர்.. அப்போது அங்கு […]

பெருநகர சென்னை மாநகராட்சி, சொத்து உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025-26ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்துவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் வரி செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998, பிரிவு-84(2)-இன் படி, குறிப்பிட்ட தேதிக்குள் சொத்து வரியை செலுத்த தவறினால், நிலுவை தொகைக்கு மாதத்திற்கு […]

இந்திய சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அமீர்கான். இவர், தனது தனித்துவமான கதாபாத்திரங்களுக்காக பெயர் பெற்றவர். கமல்ஹாசனைப் போலவே, இவர் எப்போதும் புதுமையான முயற்சிகளில் ஈடுபடுவார். ‘லகான்’, ‘பிகே’ போன்ற பல படங்கள் அதன் தனித்துவத்தால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கூலி’ படத்தில் அமீர்கானை ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்திருந்தார். ‘விக்ரம்’ படத்தில் நடிகர் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சனிக்கிழமை […]

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் அஜய் (26) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவி நந்தினி (21) ஆகிய இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு நந்தினியின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, நந்தினி வழக்கம் போல் நேற்று திருச்செங்கோடு கல்லூரியில் இருந்து நாமக்கல்லுக்கு வந்துள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி, அஜய் தனது உறவினர்களுடன் காரில் காத்துக் கொண்டிருந்தார். நந்தினி காரில் […]

‘இரிடியம் மோசடி’ தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, நெல்லை உட்பட 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களிடமிருந்து போலியான இரிடியம் ஆவணங்கள், லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம், லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடி கும்பல், ‘இரிடியம் விற்பனை மூலம் […]

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை மீண்டும் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் வந்த அவர், திமுக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், “திமுக அரசு கேபிள் டிவி […]

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்; வடக்கு ஆந்திர – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திர […]