அரசு அலுவலகங்களுக்கு வரும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக பதிவேடு ஒன்றை பராமரிக்க அலுவலர்களுக்கு தமிழக தமிழக உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் வாயிலாகப் பெறப்படும் குறைகளைவு மனுக்களின் பரிசீலனை குறித்து மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகள் வெளியிடப்பட்டன அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகளின்படி மூன்று (3) நாட்களுக்குள் மனுவைப் பெற்றுக் […]

இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், நாளை கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வடக்கு ஆந்திரா–தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் […]

மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 1,910 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி தேர்வு நடத்தப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (எலெக்ட்ரிக்கல்) உள்பட 58 விதமான பதவிகளில் 1,910 காலி்யிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு (ஐடிஐ மற்றம் டிப்ளமா கல்வித் தகுதி உடைய பதவிகள்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஜூலை 12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்‌ […]

காவல்துறையில் தலைமை காவலர், எஸ்.எஸ்.ஐ ஆகிய பதவிகளின் பதவி உயர்வுக்கான பணிக்கால வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. முன்பு, 2ஆம் நிலை காவலர் 10 வருடமும், முதல் நிலை காவலர் 5 வருடமும் பணியாற்றினால் தலைமை காவலராக பதவி உயர்வு பெறுவர். ஆனால், தற்போது, முதல் நிலை காவலர் 3 வருடம் பணிபுரிந்தாலே, தலைமைக் காவலராக பதவி உயர்வு பெறுவார். இதையடுத்து, தலைமை காவலர் 10 வருடம் பணிபுரிந்தால் சிறப்பு சார்பு ஆய்வாளராகவும் […]

மின்சாதனப் பொருட்கள் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட கம்ப்ரசர் வெடிப்பில் கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு திருமஞ்சன வீதியை சேர்ந்த பாலாஜி (வயது 53), காமராஜர் பஸ்நிலையம் அருகே ஏ.சி., பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்கள் பழுதுபார்க்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார். அவருடன், 26 வயதான கணேஷ் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று (ஜூன் 12) மதியம், கடையில் பழுது […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக இரண்டு பேருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 என்பது 2019 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய ஒரு தொற்றுநோய் வைரஸ் ஆகும். உலக நாடுகளில் இப்போதுவரை கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆரோக்கியத்திலும் சரி, பொருளாதாரத்திலும் சரி கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் ஆறாத ரணமாக மாறியுள்ளது. அந்த பாதிப்புகளே முழுமையாக விலகாத நிலையில், உலகளவில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்க […]

தவாக எம் எல் ஏ வேல்முருகனின் சர்ச்சை பேச்சுக்கு நிகழ்ச்சி மேடையில் மாணவி பதிலடி கொடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 3 ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். அந்த வகையில், இந்தாண்டும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. தவெக தலைவர் விஜய்யின் விருது […]

அன்புமணியை பார்த்தால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்றும் எனக்கு கட்டளையிட இவர் யார் என்றும் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன்.. அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவருக்கு தலைவர் பதவியை வழங்க முடியாது.. பாமக கட்சியை தொய்வில்லாமல் நடத்த […]

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த SEPC என்ற தனியார் மின் உற்பத்தி நிறுவனத்துடன் கைகோர்த்து செயல்படுகிறது என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின்மீது தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் வசூலித்து வருகிறது. தமிழகத்தில் […]