மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது வரை 1.14 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டு திமுக அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில், தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 15ஆம் […]

பாமகவில் அன்புமணி – ராமதாஸ் இருவருக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருவதால் கட்சியில் குழப்பமான சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகன் அன்புமணி மீதும் மருமகள் செளமியா மீதும் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார். கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் உள்ளது.  மாவட்ட […]

பாமக கட்சிக்குள் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மகன் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், “உயிருள்ள என்னை உதாசனம் செய்து விட்டு, என் உருவப்படத்தை வைத்து உற்சாகம் செய்கிறார்கள். என்னை நடை பிணமாக்கி என் பெயரில் நடைபயணம் செல்வதாக அன்புமணி சொல்கிறார். எல்லாமே நாடகம். என்னை […]

ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி கிராமத்தில், 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த அகழாய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின. 2023 ஜனவரியில், அமர்நாத் ராமகிருஷ்ணன் 982 பக்க ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு […]

தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு சந்தையில் இன்றைய தினம் காய்கறி விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் பெய்து வந்த கோடை மழையின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளின் விளைச்சல் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த வாரங்களில் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டது. விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் காய்கறி வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர். ஏனென்றால் இன்னும் விலை அதிகரிக்குமோ என்ற அச்சம் […]

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பக்தர் மீது கார் ஏறி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக கார் வாங்கிய நபர் பூஜைக்காக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தார். அந்த காரை முன்னே நகர்த்தியபோது கட்டுப்பாட்டை மீறி வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோயில் வாசலில் தூங்கி கொண்டிருந்த நபர் மீது கார் ஏறி இறங்கியது. பக்தரின் தலையில் கார் ஏறியதில் தலை நசுங்கி […]

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சீரமைப்பது குறித்து முடிவெடுக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில் இரண்டு வாரங்களில் குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள அபாயகரமான கழிவுகளை அகற்றவும், ஆலையை இடிக்க கோரியும் சமூக ஆர்வலர் பேராசிரியை பாத்திமா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் […]

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் […]