2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஆனால், தேமுதிகவுக்கு பாஜக கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரியில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டால், தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பை […]

சென்னை நொளம்பூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கணவரை பிரிந்து, தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நிலையில், இரவு நேரங்களில் மட்டும், தனது அம்மாவை துணைக்கு அழைத்து தூங்கி வந்துள்ளார். ஆனால், சம்பவத்தன்று இரு பிள்ளைகளும் தனது அக்கா வீட்டில் இருந்துள்ளனர். இதனால், அன்றிரவு அம்மாவின் துணையின்றி, இரவு தனியாக […]

சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்தவர் சந்துரு (வயது 21). இவர், உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே, இவர் ஆவடியைச் சேர்ந்த தொலைக்காட்சி துணை நடிகை (வயது 25) ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த துணை நடிகை ஏற்கனவே திருமணம் ஆனவர். தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சந்துருவுக்கும் துணை நடிகைக்கும் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், […]

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் ஆனவர்கள், தாங்கள் வளர்ந்த பிறகு நடிக்கும் படங்களில் பிரபலம் ஆவதில்லை. அப்படி பிரபலமானவர்களில் ஹீரோக்களே அதிகம். ஆனால் ஹீரோயின் ஒருவர் குழந்தை நட்சத்திரத்திலும், ஹீரோயினாக நடிக்கும் போதும் முதல் படத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டார். அந்த நடிகை யார் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஷாலினி தான். இவர், முதல் முறையாக 4 வயதில் மலையாளத்தில் […]

மத்திய அரசின் உதவித்தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1ஆம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு 2025-26 ஆம் நிதியாண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பது […]

நாட்டில் தற்போது கொரோனா பெருந்தொற்று கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், கர்ப்பிணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலேயே, கேரள மாநிலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி, 24 மணி நேரத்திற்குள் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கேரளாவில் கொரோனா பாதித்து […]

ஜூன் 7ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ள அமித்ஷாவை, தவெக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், கொள்கையை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் அறிவித்துள்ளார். அதே சமயம் மத்தியில் ஆளும் பாஜகவை விட, தமிழ்நாட்டை ஆளும் திமுகவையே கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அரசியலில் பணிகளில் ஈடுபட்டு வரும் […]

கிருஷ்ணகிரி மாவட்ட பாமக இளைஞர் அணி துணை செயலாளராக பதவி வகித்து வந்தவர் R.அசோகன். இவர் தற்போது பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலையில், R.அசோகன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்து கொண்டனர். அவர்களுக்குச் சால்வை மற்றும் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிருப்தியில் பாமக நிர்வாகிகள் சமீக நாட்களாகவே பாமக நிறுவனர் ராமதாஸ், […]

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கான நகல் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு […]

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9 முதல் 12-ம் தேதி வரை சில இடங்களில் […]