திமுக கட்சிகாரர்களின் வருமானத்துக்குப் பொதுமக்கள் உயிர்பலி கொடுக்க வேண்டுமா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் அருகே பாலாஜி நகரில் உள்ள அரசு ஓட்டுநர்களுக்கான குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த பெண், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக, கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி […]

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே இருக்கும் நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309-ன்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவை திரும்பப் பெற வேண்டும், பணிக்கொடை வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பன […]

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் விழாவையொட்டி இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா 26-ம் தேதி சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி 26-ம் […]

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குஜராத் – வடக்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் […]