க்யூட் (பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு) தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கைகள் நடைபெறும். தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் சேர்க்கைக்காக க்யூட் (பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு) தேர்வு எழுதிய மாணவர்கள் எங்களுடைய வலைதளமான (www.rgniyd.gov.in) –ல் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த மாணவர்கள் க்யூட் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், மத்திய அரசின் இது இடஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வரும் […]

தூங்கிக் கொண்டிருந்த தாயின் தலையில் மகன் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன், சரியாக படிக்காததால் விடுதியில் சேர்க்க அவனது பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். இதை தெரிந்து கொண்ட அந்த மாணவன், தான் விடுதிக்கு செல்ல விருப்பமில்லை என்று தாய் யுவராணியிடம் கூறியிருக்கிறான். ஆனால், தாய் யுவராணியோ நீ விடுதியில் தங்கியிருந்தால்தான் சரியாக […]

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 16 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், […]

அடுத்த ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 2023ஆம் ஆண்டில், 5 ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட, 24 அரசு பொது விடுமுறை நாள்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; “மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகள், கழகங்களுக்கும் 2023-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. […]

உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டுபாடு விதித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; இனிப்பு, காரம் தயாரிக்கும் சமையலறையில் போதுமான உறிஞ்சும் அமைப்புடன் கூடிய புகை போக்கி மற்றும் முறையான கழிவு நீர் வடிகால் அமைப்பு வேண்டும். உணவு பொருள் தயாரிப்பு வளாகத்தினுள் ஈக்கள், பூச்சிகள் புகாத வகையில் தடையமைப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு முறைகள் செயல்படுத்த […]

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் 40 மணி நேரம் உள்ளுறை பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுலவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக தொழிற்பிரிவு வேலை வாய்ப்பு திறன்களுக்கான பாடத்திட்டம் மற்றும் அது சார்ந்த பயிற்சிகள் வழங்க இருப்பதாக […]

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலை நாடுநர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌bமத்திய அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ SSC CGL 2022 தேர்விற்கான காலிப்பணியிடங்‌களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு இணையதளத்தில்‌ விண்ணப்பிப்பத்திற்கான கடைசி நாள்‌ கடந்த 08-ம் தேதி முடிவடைந்து விட்டது. இதற்கான இலவச பயிற்சி […]

கிராம உதவியாளர் எனப்படும் பணிக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள். காலியிடங்கள்: தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் இடங்கள் காலியாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10-ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.அடிப்படைத் தகுதிகள்: 21 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். 01-07-2022 தேதிக்கு முன்பாக 5ம் வகுப்புத் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்டத் […]

தமிழ் எழுத்து பயிற்சி கொடுப்பதாக சொல்லி ஐந்தாம் வகுப்பு மாணவியை தன் அறைக்குள் அழைத்து கதவை சாத்திக்கொண்டு பாலியல் சில்மிஷம் செய்த தனியார் பள்ளியின் தாளாளருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் ராயக்கோட்டை சாலையில் இயங்கி வருகிறது சாந்தி நிகேதன் மெட்ரிக் தனியார் பள்ளி.   இந்த பள்ளியின் தாளாளராக இருந்தவர் குருதத்(64). கடந்த 2019 ஆம் ஆண்டில் […]

வேலூர் அருகே கருணை இல்லத்தில் முதியோர்களை கருணையின்றி அடித்து துன்புறுத்தியதாக எழுந்த புகாரால் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில்கருணை இல்லம் செயல்பட்டு வருகின்றது.இதில் முதியோர்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் , முறையாக உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில் அந்த கருணை இல்லத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து அதிகாரிகள் கருணை இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் , முதியவர்களுக்கு சரியாக […]