அடுத்த 4 நாட்களுக்கு தொடர் கனமழை…! இன்று 16 மாவட்டத்தில் மட்டும்…! வானிலை மையம் தகவல்….!

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 16 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் 16ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

சூப்பர் அறிவிப்பு..!! ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்..!! கோடிகளை ஒதுக்கிய மத்திய அரசு..!!

Thu Oct 13 , 2022
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய போக்குவரத்து இணைப்பில் முன்னணி துறையாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. இதில், 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் ரயில்வே துறையை நாள்தோறும் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து […]

You May Like