8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; 8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் நாளை மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை […]

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வகுப்பு. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க […]

பருவமழை நோய்களைக்‌ கட்டுப்படுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரமும்‌ செயல்படும்‌ காய்ச்சலுக்கான தனிச்‌ சிறப்பு வார்டுகள்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பருவமழை கால நோய்களான டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும்‌ பன்றிக்காய்ச்சல்‌ போன்ற தொற்று நோய்கள்‌ மற்றும்‌ சாதாரண சளி, காய்ச்சல்‌ போன்றவற்றை தடுக்கவும்‌, உரிய நேரத்தில்‌ கட்டுப்படுத்தவும்‌ மாவட்ட நிர்வாகம்‌ அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்‌ எடுத்து வருகிறது. மேலும்‌ […]

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தை போல மதுரையில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரில் 60 பெண்கள் குளித்ததை ஆண் நண்பருக்கு அனுப்பியதாக புகார் எழுந்ததை அடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இதே போல மதுரையில் இளம் பெண் ஒருவர் தனியார் தங்கும் விடுதியில் பிற பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து அனுப்பி வந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் […]

அதிமுக-வில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக ஒரு கடைசி ஆயுதம் இருப்பதாகவும் தேவைப்படும்பட்சத்தில் அந்த பிரம்மாஸ்திரத்தை ஓ.பி.எஸ். எய்வார் என்று பேசப்படுவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கட்சியை வழிநடத்தி வந்தனர். திமுகவில் ஒற்றை தலைமை பற்றி பேச்சு எழுந்ததால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு இருவருமே தங்களது ஆதரவாளர்களுடன் […]

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெற்றோர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை ராமலிங்கம் வழக்கு தொடர்ந்தார். கடந்த முறை விசாரணையின்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இன்று வழக்கு நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சி.பி.சி.ஐ.டி. தரப்பில் அறிக்கைகள்  தாக்கல் செய்யப்பட்டன. […]

திருச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் குறித்த வழக்கில்இதுவரை ஒரு சிறு துப்புகூட இதுவரை கிடைக்கவில்லை. திமுகவின் மூத்த தலைவரும் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு அவர்களின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு ஒரு நாள் நடைபயிற்சிக்கு சென்றபோது கொடூரமாக கொலை செய்து வீசிச் சென்றனர். இந்த வழக்கு சுமார் 10 ஆண்டுகளாக நடைபெற்ற வருகின்றது. அதிமுக ஆட்சியின் போது இந்த […]

அரியலூர் மாவட்டம், இளங்குடந்தை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகா (24). இவர் காங்கயத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நூல் மில்லில் பணிபுரிந்து வந்தார். அதே மில்லில் பணிபுரிந்தவர் விக்னேஷ். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கனீஸ் (6) என்ற மகனும், மகாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், தம்பதியினரிடையே […]

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகேயுள்ள கிளியனூர் கிராமம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (32) இவரது மகள் சஞ்சனா (5). இந்த நிலையில் சஞ்சனாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுகுமார், தைலாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சஞ்சனாவை அனுமதித்தார். அங்கு சஞ்சனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும் சஞ்சனாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது, இதனால் சஞ்சனாவை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் […]

சென்னை அருகே  பிரபல ரவுடியை மனைவியின் கண்முன்னே சரமாரியாக கத்தியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அருகே மறைமலை நகரின் தைலாவரம் பகுதியில் வசித்து வந்தவர் சேகர் (28). இவர் கஞ்சா , கொலை  வழக்குகளில் சிக்கியுள்ள பிரபல ரவுடியாவார். பல கொலைகளில்தொடர்புடையதால் இவருக்கு எதிரிகள் அதிக அளவில் இருந்துள்ளனர். இதனால் வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மறைமலை நகர் தைலாபுரத்தில் மாமியார் […]