பி.எட் படிப்புகளுக்கு இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக உயர் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்; பி.எட் படிப்புகளுக்கு இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை https://www.tngasaedu.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 6-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அக்டோபர் 12-ம் தேதி முதல் கலந்தாய்வு துவங்கும். அனைத்து வகை கல்லூரிகளிலும் பி.எட் மாணவர் சேர்க்கையில் […]

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் படிப்புகளில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது ‌. இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்பு 4 ஆண்டு 6 மாதம் படிப்பும், 1 ஆண்டு உள்ளிருப்புப் பயிற்சியும் வழங்கப்படும். இதில் 580 இடங்கள் உள்ளன. சென்னை […]

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இன்று சைதாப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாமை நடைபெற்ற உள்ளது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யவுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்பினை அளிக்கக்கூடிய முன்னணி நிறுவனங்களும் பங்கு கொள்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பணிநியமன […]

ஏழாவது திருமணத்திற்கு மணமேடைக்கு வந்த மோசடி பெண், ஆறாவது கணவரின் புத்திசாலித்தனத்தால் போலீசில் சிக்கினார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனபால் (35) என்பவருக்கும், மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தை, மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற தரகர் ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில், பெண்ணின் அக்கா, மாமா ஆகிய இருவர் மட்டும் வந்துள்ளனர். அவர்களும், புரோக்கரும் திருமணம் முடிந்த […]

கூலித் தொழிலாளி ஒருவர் கீழே கிடந்த மணி பர்ஸில் இருந்த ரூ.4000 பணத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகு உரியவரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கூலித் தொழிலாளியான சீனிவாசன். இவரது தாய் கமலம், கடந்த 2018ஆம் ஆண்டு தனது நிலத்திற்கு சென்றபோது, வழியில் கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து வந்து தனது மகன் சீனிவாசனிடம் கொடுத்துள்ளார். அதனை […]

சினிமா தியேட்டரில் போலீஸ் உடை அணிந்து நிர்வாகிகளை மிரட்டிய கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் அடுத்த மணவாள நகரில் திரையரங்கு ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை 11 மணியளவில் போலீஸ் உடை அணிந்த நபர் ஒருவர் உள்ளே சென்று அங்கிருந்த நிர்வாகிகளிடம் பள்ளி நேரத்தில் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் சினிமா பார்க்க வருவதாக எங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை […]

தமிழகத்தில் வரும் 27-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை தமிழகம், […]

அரசுப் பள்ளியில் நடந்த பாலியல் தொல்லை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 8 மாணவிகள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து புகார் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது அந்த சிறுமி, […]

இளம்பெண் ஒருவர் தனது 9 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் அப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கள்ளக்குறிச்சி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பரமேஸ்வரி என்கிற பெண்ணுக்கும், அவரது கணவரான சுப்ரமணியன் என்பவருக்கும் குடும்பச் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் […]

எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க தமிழ்நிலம் என்ற இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வருவாய்த்துறையானது மாநிலத்தின் சீரான சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும்,  சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் தாலுகா அலுவலகங்களில் அதற்கான […]