#Tngovt: இன்று காலை முதல் வேலைவாய்ப்பு முகாம்…! மாணவர்களே வாய்ப்பை மிஸ் பண்ண வேண்டாம்…!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

இன்று சைதாப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாமை நடைபெற்ற உள்ளது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யவுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்பினை அளிக்கக்கூடிய முன்னணி நிறுவனங்களும் பங்கு கொள்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பணிநியமன ஆணைகளை வழங்கவுள்ளார்.

இப்பல்கலைக்கழகத்தில் இப்போது படித்து வரும் மாணவர்களும், முன்னாள் மாணவர்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவம் www.tnou.ac.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு , தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவின் இயக்குநரை 9791234586, 8667511342 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Vignesh

Next Post

கால்நடை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு.... விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீடிப்பு...!

Sat Sep 24 , 2022
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் படிப்புகளில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது ‌. இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்பு 4 ஆண்டு 6 மாதம் படிப்பும், 1 ஆண்டு உள்ளிருப்புப் பயிற்சியும் வழங்கப்படும். இதில் 580 இடங்கள் உள்ளன. சென்னை […]
கல்லூரிகளில் சேர வரும் 27ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு..! உயர்கல்வித்துறை அறிவிப்பு

You May Like