தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.. இதனை முன்னிட்டு அக்கட்சி தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம். முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் […]

அதிமுக அரசியலில் அதிகாரப் போர் ஒரு முடிவுக்கு வராத நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. அதிமுகவின் கதவுகள் தனக்கு நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதையும், எடப்பாடி பழனிசாமி தனது முடிவில் உறுதியாக இருப்பதையும் உணர்ந்துள்ள ஓபிஎஸ் தரப்பு, தற்போது மாற்றுப் பாதைகளை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், ஓபிஎஸ்-ஸின் நிழலாக வலம் வந்த அவரது தீவிர ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் விடுத்துள்ள ஒரு […]

உலகளவில் புற்றுநோயின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வரும் நிலையில், மாறிவரும் நவீன வாழ்வியல் முறைகளே இந்த அபாயத்திற்கு முக்கியக் காரணியாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ’கூல் லிப்’ (Cool Lip) போன்ற போதைப்பொருட்களின் பயன்பாடு குறித்து அடையாறு புற்றுநோய் மையத்தின் இயக்குநர் டாக்டர் கல்பனா மிக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். சிகரெட்டில் உள்ள அதே நிக்கோட்டின் இதிலும் கலந்திருப்பதால், இது நேரடியாக ரத்த […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், மருத்துவத் துறை மற்றும் தொழில்நுட்பத் துறையில் நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, உயிர்கொல்லி நோயான புற்றுநோயுடன் போராடும் நோயாளிகளுக்கு மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, 17 வகையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது. இதேபோல், சர்க்கரை நோய் தொடர்பான சில […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு சற்றே கசப்பான செய்திகளைக் கொண்டு வந்துள்ளது. இறக்குமதி வரி மற்றும் பல்வேறு வரிச்சலுகைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் முதல் முதலீட்டு சந்தை வரை பலவற்றின் விலைகள் அதிரடியாக உயரவுள்ளன. குறிப்பாக, காஃபி பிரியர்களுக்கு இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இதுவரை காபிக்கொட்டை வறுத்தல், காஃபி தயாரிக்கும் […]

ஆன்மீகமும் வரலாறும் சங்கமிக்கும் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சுமார் 1200 ஆண்டுகள் பழமையான ஒரு புண்ணிய பூமியாக திகழ்கிறது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகழ்பெற்ற முருக வழிபாட்டுத் தலமான இங்கு, கருவறையில் முருகப்பெருமான் சுமார் 7 அடி உயரத்தில், வள்ளி மற்றும் தேவசேனாவுடன் கம்பீரமாகக் கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார். இந்தத் தலத்திற்கு ‘வல்லக்கோட்டை’ என்ற பெயர் […]

மயிலாடுதுறை நகராட்சிப் பகுதிகளில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று அதிமுகவில் இணைந்தனர். நகராட்சியின் 26 மற்றும் 27 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், அனீஷ் மற்றும் மைக்கல்ராஜ் ஆகியோர் தலைமையில் திரண்டு வந்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டது மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

தமிழ்நாட்டில் நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், சொத்து பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாகவும் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் பரிசீலனைக்குப் பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது கிடைத்துள்ள இந்த ஒப்புதலின் மூலம், தமிழகப் […]

மத்திய பட்ஜெட் 2026-27 தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டாவது தமிழகத்தின் கோரிக்கைகள் செவிமடுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், மத்திய அரசு மீண்டும் ஒருமுறை ‘மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்’ நடந்து கொண்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார். வரிப்பகிர்வு முதல் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் வரை அனைத்திலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதை அவர் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார். மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 41 விழுக்காட்டிலிருந்து 50 […]

செங்கல்பட்டு அருகே 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் முறையற்ற கருக்கலைப்பு முயற்சியால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயதே ஆன அந்தச் சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்த நிலையில், 10 வார கர்ப்பமடைந்தது உறவினர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடும்ப கௌரவம் மற்றும் சமூகப் பழிச்சொல்லுக்கு […]