போதை பொருள் வழக்கில் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு தாக்கல் செய்துள்ளனர். கொகைன் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த மாதம் 24-ம் தேதி கைது செய்யப்பட்டார்.. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணா, போதை பொருள் சப்ளையர் கெவின் ஆகியோர் கடந்த மாதம் 26-ம் தேதி கைது செய்யப்பட்டனர். தற்போது 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் […]

அதிமுகவின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயண பாடல், லோகோ வெளியீட்டு நிகழ்ச்சியில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்ததால் தமிழ்நாடு ஏற்றம் பெற்றது.. கடந்த 50 மாத ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்கள் பெற்ற வேதனைகள், துன்பங்கள், கொடுமைகள் அத்தனையும் மக்களிடம் பட்டியலிட்டு எடுத்து சொல்லி, திமுக ஆட்சியை […]

எடப்பாடி பழனிசாமியின் “ மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. அரசியல் கட்சியினர் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது.. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கி உள்ளது. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி […]

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ம் ஆண்டு பிறந்தவர் வா. மு. சேதுராமன். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.. நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம் உள்ளிட்ட பல நூல்களை சேதுராமன் இயற்றி உள்ளார். ஒரு லட்சத்திற்கும் அதிமான கவிதைகளை […]

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பயன்களைப் பெற அனுமதி அளித்த அரசு உத்தரவு. கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலே, அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை 01.04.2026 முதல், 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு […]

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க, பயிற்சி மையங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை 2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 3 ஆண்டுகளில், நான் முதல்வன் திட்டத்தால் 3 இலட்சத்து 28 ஆயிரத்து 393 மாணவர்கள், முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் […]

கைவிரல் ரேகையை பதிவு செய்யாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்ற செய்தியில் உண்மையில்லை என தமிழக அரசின் Fact Check தெரிவித்துள்ளது. அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம்‌ 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் அவர்களுக்கு மத்திய மாநில அரசாங்கம் […]

மாதம்தோறும் ரூ.8,000 உதவித் தொகையுடன் தொல்லியல், கல்வெட்டியல் பாடங்களில் முதுகலை டிப்ளமா படிப்பு படிக்கலாம் என தமிழக அரசு நிறுவனம் அறிவித்துள்ளது சென்னையில் உள்ள தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் 2 ஆண்டு கால தொல்லியல், கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் முதுகலை டிப்ளமா படிப்புகளும், ஓராண்டு கால சுவடியியல் முதுகலை டிப்ளமா படிப்பும் வழங்கப்படுகின்றன. தொல்லியல் படிப்பில் ஏதேனும் ஒரு பாடத்தில் முதுகலை பட்டம் […]

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் அடிப்பது போன்ற வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இதனிடையே […]

ரியல் எஸ்டேட் அதிபரும், பாஜக பிரமுகருமான அழகப்பன், நில மோசடி செய்த வழக்கில் முக்கிய சாட்சியான நடிகை கௌதமியிடம் 10 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் அளித்தார். அதில் அழகப்பன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் தனது சொத்துக்களை மோசடி செய்து அபகரித்து உள்ளனர். எனவே தனது அசையா சொத்துக்களை பராமரிக்க […]