நீலகிரி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்தில்குமார், கடந்த 23 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், உதகை அருகே உள்ள காத்தாடிமட்டம் அரசு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த இவர், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு அறிவியல் பாடங்களை கற்பித்து […]

தமிழ்நாட்டின் இந்த அவலநிலைக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பொது மன்னிப்பு கேட்டு, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா “ வரலாற்று சிறப்புமிக்க இந்த செயற்குழுவில், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வாய்ப்பளித்த முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் அனைவருக்கும் வணக்கம்.. ஓரணியில் திரள்வோம் என்று வீடு வீடாக முதலமைச்சர் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் சிவகங்கையில் […]

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் செயற் குழுக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார். இதையடுத்து செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், “திமுக மற்றும் பாஜக உடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதை உறுதியாக […]

கொள்கை எதிரிகளோடு ஒருபோதும் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தவெகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் விஜய் கூட்டணி தொடர்பான முக்கியமான அறிவிப்பை வெளியிட்டா. அப்போது பேசிய அவர் “ கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை.. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக, மக்களை மத ரீதியாக பிளவுப்படுத்தி, வேற்றுமையை விதைத்து குளிர்காய நினைக்கிறது பாஜக. அவர்களின் இந்த […]

அஜித் குமார் வழக்கில் புகாரளித்த நிகிதா மீது பல மோசடி புகார்கள் குவிந்து வரும் நிலையில், அவர் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அவர் “ தம்பி அஜித் குமார் மரணம் கண்டிப்பா ஏற்றுக்கொள்ளவே முடியாத வேதனை.. நானும் என் தாயும் தினமும் அழுதுட்டு இருக்கோம். நான் காவல் நிலையத்திற்கு சென்றேன்.. புகார் கொடுத்தேன்.. இன்ஸ்பெக்டருக்காக நாங்கள் காத்திருந்தோம்.. அவர் இரவு 8.30 மணி போல வந்தார். […]

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் நியமிக்கப்படுவதாக தவெக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் செயற் குழுக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு கட்சி தலைவர் விஜய் பகல் 12 மணிக்கு வந்தார். தொடர்ந்து கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கொள்கை தலைவர்கள் […]

தவெக மாநில செயற்குழு கூட்டத்தில், நிர்வாகிகளுக்கு விஜய் சில முக்கிய அறிவுரைகளையும் வழங்கி உள்ளார். தவெகவின் மாநில செயற்குழு கூட்டம், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில மண்டல நிர்வாகிகள், செயலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விஜய்யின் தாயார் ஷோபாவும் இதில் கலந்து கொண்டார். செயற்குழு கூட்டம் […]

பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் விசாரணை செய்ய தயங்கினால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் குறித்தும் சைவ, வைணவம் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறிய ஆபாச கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பொன்முடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறியதாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் […]

பாமக சட்டப்பேரவை கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று எம்.எல்.ஏ அருள் தெரிவித்துள்ளார் பாமகவின் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டி உள்ளது. தலைமை பதவி தொடர்பாக ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கட்சி நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளையும் அறிவித்தும் இருவரும் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன் தினம் […]