இந்தியப் பெருங்கடலில் நுழையும் ஒவ்வொரு கப்பலையும் இந்திய கடற்படை கவனமாக கண்காணித்து வருவதாகவும், அதில் சீனக் கப்பல்களும் உள்ளதாகவும், எந்தவித சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதாகவும் கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன் இன்று தெரிவித்துள்ளார். இது, பீஜிங் சார்பில் இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் ராணுவச் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் ஒரு தெளிவான அறிகுறியாகும்.. தொடர்ந்து பேசிய அவர் “தற்போது இந்திய கடற்படையில் சுமார் 40 கப்பல்கள் இந்தியப் […]

இந்திய சைபர் பாதுகாப்பு அமைப்பான Cert-In (Indian Computer Emergency Response Team), இன்று Google Chrome பிரவுசர் மற்றும் டெவலப்பர்களுக்கான தளம் GitLab ஆகியவற்றில் கடுமையான பாதுகாப்பு குறைகள் இருப்பதாக எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த குறைகள் ஹேக்கர்களால் பயன்படுத்தப்பட்டால், பயனர்களின் தரவுகளை திருடுதல், சிஸ்டத்தில் அனுமதியில்லாத குறியீடுகளை இயக்குதல் மற்றும் பல்வேறு வகையான இணையத் தாக்குதல்களை நடத்துதல் போன்ற ஆபத்துகள் ஏற்படக்கூடும் என Cert-In தெரிவித்துள்ளது. இதற்காக Google […]

பீகாரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இன்று வெளியிட்டது. பாட்னாவில் உள்ள ஹோட்டல் மௌரியாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாஜக, ஜேடியு, எல்ஜேபி(ஆர்வி), எச்ஏஎம் மற்றும் ஆர்எல்எம் உள்ளிட்ட அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சங்கல்ப் […]

விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் விதைகள் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்: விவசாயிகளை உற்பத்தியாளர்களாகவும், தொழில்முனை வோராகவும், வர்த்தகர்களாகவும் உருவாக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் இதன் மூலம் விவசாயிகள் நேரடியாக பயனடை முடியும் என்று தெரிவித்தார். விவசாயிகளின் நலன் கருதி ஒருங்கிணைந்த வேளாண் நடைமுறைகளில் மத்திய அரசு […]

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அடுத்த 23-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.. அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்ய காந்த் பெயரை அவர் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார்.. இந்த நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, நீதிபதி சூர்யா காந்தை இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக (CJI) நியமித்துள்ளதாக சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தெரிவித்தார். மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது […]

மும்பையின் பவாய் பகுதியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இன்று ஆடிஷனுக்காக வந்த சுமார் 20 குழந்தைகளை பிணைக் கைதிகளாக ரோஹித் ஆர்யா என்ற நபர் சிறைபிடித்துள்ளார்.. இந்த சம்பவம் பவாய் பகுதியில் உள்ள பிரபலமான RA ஸ்டூடியோவில் நடந்தது. தகவல் கிடைத்ததும் மும்பை போலீசார் மற்றும் அவசர சேவை குழுக்கள் உடனடியாக அங்கு விரைந்தன. ஆக்டிங் ஸ்டூடியோவில் என்ன நடந்தது ? மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் ரோஹித் ஆர்யா, […]

டெல்லியில் உள்ள ஒரு பெண்கள் தங்கும் விடுதியில் நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதியின் கழிவுக் குழாய் அடைப்பு குறித்து துப்புரவுப் பணியாளர்கள் மேன்ஹோலை திறந்து பார்த்தபோது, உள்ளே கண்ட காட்சி அவர்களை திகைக்க வைத்தது. குழாய் அடைப்பிற்கு காரணமாக ஆயிரக்கணக்கான ஆணுறைகள் மற்றும் பிற கழிவுப் பொருட்கள் இருந்தன. சுமார் 60 பெண்கள் தங்கியிருந்த இந்த விடுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்த நிர்வாகத்தினர், உடனடியாக […]

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் அகிர்வார் என்பவருக்கும், தீஜா என்ற பெண்ணுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வருடத்திற்கு இவர்களது இல்லற வாழ்க்கை சீராக சென்ற நிலையில், அதன் பிறகு கணவன் முகேஷ் அகிர்வாரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல நேரங்களில் இரவு நேரங்களில் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார் முகேஷ். இது குறித்து மனைவி தீஜா கேள்வி எழுப்பிய போதெல்லாம், […]

கேஸ் சிலிண்டர் நுகர்வோருக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஒரு அதிர்ச்சியூட்டும் முடிவை எடுத்துள்ளது. வீட்டில் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. மானிய விலையில் சிலிண்டர்களைப் பெறுபவர்கள் உடனடியாக ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் e-KYC யை முடிக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் சிலிண்டருக்கான மானியத் தொகை அவர்களின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். இல்லையெனில், அது டெபாசிட் செய்யப்படாது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) […]