சினிமாவில் ஒரு நடிகரால் ஒரே படத்தில் பல கதாபாத்திரங்களில் நடிக்க முடியும். பெரும்பாலும் இரட்டை வேடங்களில் நடிப்பார்கள். ஆனால், குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டுமே இரண்டுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பார்கள். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் ‘தசாவதாரம்’ படத்தில் 10 கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார். அதற்கு முன்னதாக ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் 4 கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். திரையுலகில் பல புதுமைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார் கமல்ஹாசன். அவருக்கு அடுத்ததாக […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதில் குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்ததம் ரத்து அமைந்து இருந்தது. பாகிஸ்தானின் 80 சதவீத விவசாயம் சிந்து நதி நீரை நம்பியிருப்பதால், இந்தியா அந்த நீரை நிறுத்த எடுத்து இருக்கும் முடிவு பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் சீனா இப்போது சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது. பீஜிங்கில் உள்ள சீனா மற்றும் உலகமயமாக்கல் […]
மணிப்பூர் மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. தற்போதைக்கு தனக்கு 44 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை சந்தித்து பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷாம் சிங் கூறியுள்ளார். இந்த சூழலில் தான், மணிப்பூரில் மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. அதாவது, பாரதிய ஜனதா கட்சியின் பெண் தலைவரின் மகனின் 130 ஆபாச வீடியோக்கள் தொடர்பான […]
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி 33 நாடுகளுக்கு எடுத்துரைப்பதற்காக சென்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளின் குழு அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளனர். கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தளத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் […]
டிஜிட்டல் இணைப்பு விதிமுறைகளுக்கான சொத்துக்களின் மதிப்பீடு, 2024” இன் கீழ் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; டிஜிட்டல் இணைப்பு விதிமுறைகளுக்கான சொத்துக்களின் மதிப்பீடு, 2024” இன் கீழ் டிஜிட்டல் இணைப்புக்கான சொத்துக்களின் மதிப்பீட்டை மதிப்பிடுவதற்கான ‘வரைவு கையேட்டை’ இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2025 மே 13 அன்று வெளியிட்டது. இதுகுறித்த பங்குதாரர்களின் […]
ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு”-தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிப்பு. தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக ஒத்திவைப்பு. நாடு முழுவதும் எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளாமோ படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி கடந்த […]
ராஷ்ட்ரிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 75 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : Officer (Finance), Management Trainee (Boiler), Management Trainee (Marketing), Management […]
பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் ரோஹித் சாஹ்னி என்ற நபர், மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை அளில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டுத்தப்பியிருக்கிறார். மகளைக் காணவில்லை என்று தேடி வந்த தாயிடம், அக்கம் பக்கத்தினர், அவர் ரோஹித்துடன் சென்றதாகக் கூறியிருக்கிறார்கள். ரோஹித் இருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது 9 வயது சிறுமி ரத்தவெள்ளத்தில் கிடந்தார். தனது மகளைப் பார்த்து கதறி அழுத […]
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ நடவடிக்கையில் இரு நாடுகளும் எவ்வளவு இழப்பைச் சந்தித்தன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு , மே 7 அன்று பாகிஸ்தானில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது . இந்த நடவடிக்கையின் போது, இந்தியா ஒரு மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் உள்ள 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்தது, இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில், இந்தியா பாகிஸ்தான் மீது […]
சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ராணுவ முகாம் மீது ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 9 வீரர்களை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிக்கிமின் லாச்சென் மாவட்டத்தில் உள்ள சாட்டனில் நேற்று மாலை 7 மணியளவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 6 வீரர்கள் இன்னும் காணவில்லை என்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் […]

