அதிமுக மூத்த தலைவரும், புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் முக்கியப் பங்காற்றியவருமான வி.சி.ராமையா, இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவு, கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வாண்டான்கோட்டை அருகே இன்று காலை இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. வி.சி.ராமையா அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர் மீது கார் ஒன்று மோதியுள்ளது. […]

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்: டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இந்த […]

திண்டுக்கல்லில் சுமார் 22,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார் ‌. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) போது, ஏறக்குறைய 7,227 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.சுமார் 26 வாக்குச்சாவடிகளில் இந்த முறைகேடு நடைபெற்றிருக்கிறது. இதன் பின்னணியில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை சம்பந்தப்பட்டிருக்கின்றனர். சின்னாளப்பட்டி […]

கோபிசெட்டிபாளையத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி; வரும் தேர்தலில் கோபி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார். அதனை உறுதி செய்துள்ளது இங்கு கூடியுள்ள கூட்டம். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதியில் வெற்றி பெறும். இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர், ஓட்டு வாங்கும்போது உங்களை அணுகினார். ராஜினாமா செய்ய உங்களை சந்தித்தாரா…? கடந்த 26, 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இங்கு […]

அமலாக்கத்துறை விசாரித்து வரும் நேஷ்னல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றம் தடுப்பு பிரிவு காவல்துறை வழக்கு பதிவு. அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரின் புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர். கடந்த 2008-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்டபோது அதை நடத்திய அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 90 கோடி […]

திமுக கூட்டணியில் ‘புதிய திராவிட கழகம்’ கட்சி இணைந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைகள் பிப்ரவரி, மார்ச் வாக்கில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கூடுதலாக சில கட்சிகள் கூட்டணிக்கு வர இருப்பதாக தகவல். இவர்களை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பல கட்சிகள் திமுக […]