தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்து வரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும், இல்லையேல், அவர்களுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை கற்பிக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் […]

அதிமுகவின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயண பாடல், லோகோ வெளியீட்டு நிகழ்ச்சியில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்ததால் தமிழ்நாடு ஏற்றம் பெற்றது.. கடந்த 50 மாத ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்கள் பெற்ற வேதனைகள், துன்பங்கள், கொடுமைகள் அத்தனையும் மக்களிடம் பட்டியலிட்டு எடுத்து சொல்லி, திமுக ஆட்சியை […]

எடப்பாடி பழனிசாமியின் “ மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. அரசியல் கட்சியினர் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது.. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கி உள்ளது. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி […]

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுகவில் தொண்டரணி தொடங்கியது முதல் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் அனைத்து வெளியூர் பயணங்களிலும் உடன் இருந்தவர். அய்யாவு மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் […]

பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி மற்றும் சொக்கலிங்கபுரம் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கையில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஈடுபட்டார். அரசின் திட்டங்கள் முறையாக வந்து […]

மத்திய அரசு கடந்த ஆண்டு வரை வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைத்த சாலைகள் எத்தனை என தமிழக அரசுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராம ஊராட்சி, இரண்டு பக்கமும் பவானி ஆற்றால் சூழப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு காலங்களில், பரிசல் போக்குவரத்து தடைபடுவதால், சுமார் 8 […]

தமிழ்நாட்டின் இந்த அவலநிலைக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பொது மன்னிப்பு கேட்டு, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா “ வரலாற்று சிறப்புமிக்க இந்த செயற்குழுவில், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வாய்ப்பளித்த முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் அனைவருக்கும் வணக்கம்.. ஓரணியில் திரள்வோம் என்று வீடு வீடாக முதலமைச்சர் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் சிவகங்கையில் […]

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் செயற் குழுக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார். இதையடுத்து செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், “திமுக மற்றும் பாஜக உடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதை உறுதியாக […]

கொள்கை எதிரிகளோடு ஒருபோதும் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தவெகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் விஜய் கூட்டணி தொடர்பான முக்கியமான அறிவிப்பை வெளியிட்டா. அப்போது பேசிய அவர் “ கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை.. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக, மக்களை மத ரீதியாக பிளவுப்படுத்தி, வேற்றுமையை விதைத்து குளிர்காய நினைக்கிறது பாஜக. அவர்களின் இந்த […]