பிறந்தநாளை முன்னிட்டு ஓமந்தூரில் அடிக்கப்பட்டுள்ள பேனரில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் படம் இடம்பெறவில்லை. தமிழக பாஜகவினர் பிரதமர் மோடி பிறந்த நாளை சேவை இருவார நிகழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, மருத்துவ முகாம்கள் நடத்துவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, படகு போட்டிகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பிரதமர் மோடியின் சாதனைகள், […]

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர் “ கடந்த சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு இனி பாஜக உடன் கூட்டணி கிடையாது. அவர்கள் தான் தேர்தல் தோல்விக்கே காரணம் என்று அதிமுக.. ஆனால் இன்று எங்கள் ஆட்சியை காப்பாற்றியதே பாஜக. அதற்கு நன்றியோட இருப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.. இன்று […]

விசிக தலைவர் திருமாவளவன் இன்று பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது விஜய்யின் தவெக விசிகவின் வாக்குகளை பிரிக்கப் போகிறது என்ற கருத்து குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.. அதற்கு பதிலளித்த திருமாவளவன் “ இது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி.. இப்படி சொல்வதன் மூலம் விசிக உணர்ச்சி வயப்படும், திருமாவளவன் உணர்ச்சி வயப்படுவார்.. வார்த்தைகளை விட்டுவிடுவார் என்றெல்லாம் அவர்கள் எதிர்பார்க்கிறார்.. விஜய் ஒரு சினிமா நடிகர்.. அவருக்கென ஒரு ரசிகர் […]

பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வழக்குகள் அதிகரித்துவிட்டன என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பேசிய அவர்; அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது. போதுமான ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் […]

தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறையை தேர்தல் ஆணையம் மேலும் எளிமைப்படுத்த திட்டமிட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகளை நெறிப்படுத்தவும், மேம்படுத்தவும் தேர்தல் ஆணையம் கடந்த ஆறு மாதங்களில் 29 முன்முயற்சிகளை எடுத்துள்ளது. தாமதங்களை குறைக்கும் வகையில் 30-வது முன் முயற்சியாக தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தற்போது எடுத்துள்ளது. இதன்படி வாக்குகளை எண்ணும் பணி 2 பிரிவுகளைக் கொண்டதாகும். தபால் வாக்குகளை எண்ணுதல் மற்றும் மின்னணு […]

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிசம்பர் 5-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனைத்து ம‌க்க‌ளுக்குமான‌ சாதிவாரி க‌ண‌க்கெடுப்பை உட‌னே ந‌ட‌த்த வேண்டும்.அதுவ‌ரை இடைக்கால ஏற்பாடாக வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு தனி ஒதுக்கீட்டைத் த‌டுக்கின்ற நீதிம‌ன்ற‌ தடையாணையைப் போக்கி வன்னியர்களுக்கு இட‌ ஒதுக்கீட்டை வ‌ழ‌ங்க வேண்டும் என்ற […]