அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.. தனது சுற்றுப்பயணத்தின் பேசிய அவர் “ காங்கிரஸ் கட்சி நூற்றாண்டு கண்ட கட்சி.. அப்படிப்பட்ட கட்சி திமுகவிற்கு அடிமையாக உள்ளது.. இப்படி அடிமைத்தனமாக இருப்பது காங்கிரஸ் தான்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பல கட்சிகளில் இருந்து வந்தவர்.. பிச்சைக்காரர்களின் ஒட்டுப்போட்ட சட்டை மாதிரி, இவர் பல கட்சிக்கு போயிட்டு வந்தவர்.. […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோனாபட்டு கிராமத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி, பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு, அதற்கான ஆணைகளை மக்களிடமே நேரடியாக வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், ’உங்களுடன் ஸ்டாலின்’ என்பது மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். பொதுமக்கள் தங்கள் குறைகளுக்காக பல அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இனி இருக்காது. ஒரே […]
கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று நீலகிரி தொகுதியில் பேசிய அவர்; நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார் உதயநிதி. அதிக கடன் வாங்குவதில், கமிஷன், ஊழலில், வாரிசு அரசியலில், ஸ்டிக்கர் […]
ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சென்னை உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.87 கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக சமூகத் தணிக்கையில் கண்டறியப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. […]
தமிழ்நாடு அரசு எரிசக்தி துறை முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நல பாதிப்பு காரணமாக, கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. கொரோனா காலத்தில் தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலராக பணியாற்றியவர் பீலா வெங்கடேசன் என்பது […]
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பல கட்சியில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு காங்கிரஸ் கட்சி மீது விசுவாசம் இல்லை, திமுகவை தான் தாங்கி பிடிக்கிறார் என இபிஎஸ் விமர்சனம் செய்திருந்தார்.. இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் செல்வப்பெருந்தகையிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ காங்கிரஸை பற்றி இபிஎஸ் ஏன் கவலைப்பட வேண்டும்? நான் காங்கிரஸ் மீது விசுவாசமாக இருக்கிறேனா இல்லையா என்பது […]
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அரசியல் தலைவர்கள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.. இந்த சூழலில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்று கூறி ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது அரசியலில் பெரும் […]
Vijay is sowing hate politics in the name of opposing DMK wherever he goes, says VKC leader Thirumavalavan.
2 நாட்களுக்கு சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரனை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.. சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் நேற்றிரவு சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என அண்ணாமலை தினகரனிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிடிவி தினகரனுடன் பேசியது என்ன என்பது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய […]
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது மத்திய அரசின் எந்த திட்டம் மக்கள் விரோத திட்டம் என்பதை முதல்வர் விளக்க வேண்டும்..” என்று கூறினார்.. பாஜகவிற்கு நீங்கள் தலைவரா அல்லது அண்ணாமலை தலைவரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன் “ இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.. நீங்கள் தலைவரா அவர் தலைவரா என்றால் எங்களுக்குள் சண்டை […]

