கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் சுற்றுப்பயணம் தற்காலிகமாக தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்றுமுன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், கரூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் […]

கரூர் சம்பவம் திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது என கூறி, சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்’ என மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. தவெக தலைவர் விஜய் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் […]

கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அரசியல் மற்றும் சமூக விமர்சகர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, உயிரிழப்புகள் குறித்த தகவல் தெரிந்தும் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் அவசரமாக சென்னைக்கு திரும்பியது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், தனது எக்ஸ் தளத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். “மக்களின் சாவு உன் கண்ணுக்கு […]

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தி வரும் பிரச்சாரக் கூட்டத் தொடரின் 3ஆம் கட்டம் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடந்தது. ஆனால், கரூரில் கட்டுக்கடங்காத கூட்டத்தால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் பிரச்சாரத்துக்காக தொண்டர்களும் ரசிகர்களும், குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும், அதிகாலை முதலே திரண்டு இரவு வரை காத்திருந்தனர். விஜய்யின் பிரச்சார வாகனம் […]