திரையில் வெற்றிகரமான உச்ச நடிகராக வலம் வந்த விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.. ஆரம்பம் முதலே விஜய் மீது வைக்கப்படும் விமர்சனம் அவர் மக்களை நேரடியாக சந்திக்காது தான்.. ஆனால் மக்களை சந்திக்க பயணம் மேற்கொண்ட போது தான் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர்.. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது. ஆனால் இந்த சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்காதது, […]

தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பின் நடவடிக்கைகள் குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்தார். தன்னைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கட்சியிலிருந்து நீக்கியதாக ஈ.பி.எஸ் தரப்பு கூறி வருவது, செல்லுபடியாகாத ஒரு காலாவதியான செய்தி என்று அவர் கூறினார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் சாதாரண தொண்டர்களின் வாக்குகள் மூலம் உருவாக்கப்பட்டவை என்பதால், ஒரு […]

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், பிரபல நடிகையுமான குஷ்புவின் சமீபத்திய அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சித் தலைமை பச்சைக்கொடி காட்டினால், வரும் பொதுத்தேர்தலில் தான் மீண்டும் தேர்தல் களத்தில் இறங்குவது உறுதி என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் மூலம், கடந்த சில காலமாகக் கட்சிப் பணிகளில் சற்று மௌனம் […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், விருதுநகர் மாவட்ட அதிமுகவில் ஒரு முக்கிய அரசியல் நகர்வு அரங்கேறியுள்ளது. சிவகாசியில் நடைபெற்ற பிரம்மாண்டமான இணைவு விழாவில், முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் முக்கியத் தலைவருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தற்போது தமிழக அரசியலில் திமுக, […]

கரூர் கிருஷ்ணராயபுரத்தில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.. இந்த புகார் தொடர்பாக இன்று தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் திருச்சி செய்தியாளர் கதிரவன் இன்று செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.. அப்போது கதிரவனை சுற்றி வளைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.. சம்பவ இடத்தில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர் நிருபர் உள்ளிட்ட 4 பேர் மீது […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ […]

தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் தற்போது தேர்தல் களத்தில் தனிப்படுத்தப்பட்டுள்ளார்.. அவரின் இந்த நிலைக்கு என்ன காரணம்? விரிவாக பார்க்கலாம்.. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார்.. வரும் செப்டம்பர் மாதம், ஓ. பன்னீர்செல்வம் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகி 25 ஆண்டுகள் ஆகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மற்றும் அவரது உதவியாளர் வி. […]

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகியவற்றுடன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் குதித்துள்ளதால் அரசியல் சதுரங்கம் விறுவிறுப்படைந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில், மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சேலத்தில் நேற்று நடைபெற்ற […]

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், ஜனநாயக கடமையின் முதல் படியான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளுக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் (ஜனவரி 30) முடிவடைய இருந்த நிலையில், தற்போது அந்த அவகாசத்தைப் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நீட்டித்து […]

சென்னை தரமணியில் பீகாரை சேர்ந்த மூவர் படுகொலை, நந்தனம் அரசு கல்லூரி கேண்டீன் பெண் ஊழியர்க் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவெக தலைவர் விஜய் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. சென்னை அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து […]