மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது தமிழக மக்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்க பாஜக மேற்கொள்ளும் சதித் திட்டம் என்றும், அதனை ஆதரிப்பவர்கள் 21-ஆம் நூற்றாண்டின் எட்டப்பர்கள் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றிய பின்னர், கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை […]

காவிரி விவகாரத்தில் திமுக கபட நாடகமாடுவதாகவும், ஆட்சியை இழந்த விரக்தியில் மு.க.ஸ்டாலின் வன்மத்தைப் பொழிந்து வருவதாகவும் தவெக கடுமையாக சாடியுள்ளது. இது தொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”விவசாயிகள் மற்றும் கர்நாடக வாழ் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டே முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. சுயநல நோக்கத்துடன் செயல்படும் திமுகவைப் போல் அல்லாமல், மக்கள் நலனை முதன்மையாக கொண்டே தமிழக அரசு […]

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறான மற்றும் உண்மையற்ற தகவல்களைப் பரப்பி வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநிலத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான மின் கட்டண புகார்கள் வந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுவது முற்றிலும் பொய்யானது. பொதுமக்கள் தரப்பில் இருந்து அதுபோன்ற புகார்கள் ஏதும் வரவில்லை. மாறாக, மின்சார வாரியத்தின் நிர்வாக ரீதியான சீரமைப்பிற்காக சுழற்சி முறையில் 3 […]

சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, திமுகவில் அமைப்புகளை முழுமையாக மறுசீரமைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 12 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்குப்பெட்டி மூலமாக உட்கட்சித் தேர்தலை நடத்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அடைந்த பின்னடைவை அடுத்து, கட்சியின் கிளை முதல் தலைமை நிர்வாகம் வரை உள்ள அனைத்துக் கட்டமைப்புகளையும் சீரமைப்பதற்காக 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்திருந்தார். இக்குழுவினர் கட்சி […]

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை கர்நாடக அரசு சிறிதும் மதிப்பதே இல்லை என்றும், அண்டை மாநில அரசிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடக் கோரி கடந்த 20 நாட்களில் காவிரி மேலாண்மை ஆணையம் இருமுறை உத்தரவிட்டும், கர்நாடக அரசு அதனைப் […]

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாகப் பெய்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யவும், வேளாண் சாகுபடி மற்றும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளவும் ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலத்தின் தற்போதைய மழைப்பொழிவு, குடிநீர் இருப்பு மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலவரங்கள் குறித்து விரிவாக […]

கடந்த ஆட்சி காலங்களில் கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்ட காரணத்தினாலேயே, தமிழகத்திற்கு வரவேண்டிய பன்னாட்டு முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றதாக அமைச்சர் அருண்ராஜ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயங்கியதற்கான காரணம் இங்குள்ள மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். எந்தவொரு திட்டம் தொடங்கப்பட்டாலும் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதே […]

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட திரையிடலை கர்நாடக திரையரங்கு உரிமையாளர்கள் திடீரென நிறுத்தி வைத்துள்ளனர். காவிரியில் இருந்து உரிய நீரை திறக்கக் கோரி தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், காவிரி பிரச்சனை குறித்துப் பேசுவதற்காக முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு சென்று […]

காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளியாகும் தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இத்தகைய பேச்சுவார்த்தைகளை முதலமைச்சர் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரியில் தமிழகத்திற்கான உரிய நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகளை கர்நாடக அரசு ஒருபோதும் மதித்து நடந்துகொள்வதில்லை என சாடினார். காவிரி […]

தமிழகத்தின் காவிரி நீர் உரிமைகளை நிலைநாட்ட தவறியதோடு, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதாக கூறி தவெக அரசை கண்டித்து, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சுமார் 14 லட்சம் விவசாயிகள் வரை ரூ.2,500 கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், […]