தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி வியூகங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது. இது தங்கள் கட்சியின் வாக்குகளை பிரித்துவிடுமோ என்ற அச்சத்திலும் அரசியல் தலைவர்கள் இருந்து வருகின்றனர். விஜய் தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், 2026 சட்டமன்றத் […]

புழல் சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு. குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான ஆவணங்கள் சிறைத் துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன. புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருப்பவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி. இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்தும் அவருக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலக நுழைவாயில் […]

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் முடிவு எடுப்பார் என்று வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; உங்களோடு ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் அதிகமாக மகளிர் உரிமைத் தொகை குறித்த மனுக்கள் வருகின்றன. இதை சென்னைக்கு அனுப்பிவைக்கிறோம். முதல்வரைப் பொருத்தவரை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார். தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். இந்த […]

இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்துள்ளார். இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் அவரது சாதனைகளை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு-50 பாராட்டு விழா’ சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. விழாவில், இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நினைவுப் பரிசு வழங்கினார். விழாவில் பேசிய அவர்: […]

கருவில் உள்ள சிசு பாலினம் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியராக இருந்தால், விதிமுறைகளின்படி துறை ரீதியான நடவடிக்கை, சட்ட நடவடிக்கை, காவல் துறை நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் […]

வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம் தொடர்பாக நில அளவை துறை உதவி வரைவாளர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக. 29-ம் தேதி காலை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இதுகுறித்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், அலட்சியமாகப் பணிபுரிந்த 7 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருப்புவனம் […]

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு பெற, சிறை நிரப்புவது உட்பட எத்தகைய அறப்போராட்டங்கள், தியாகங்களை செய்யவும் தயாராகவே இருக்கிறோம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில்; கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீததனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் அவர்களது மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடவே, கடந்த 1980-ல் வன்னியர் சங்கத்தை ராமதாஸ் தொடங்கினார். […]