மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்பி தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வில்சன் மாநிலங்களவை எம்பியாக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோரும் மாநிலங்களவைக்கு செல்கின்றனர். ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் […]

ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப்பெற்றதுபோல் ரூ.500 நோட்டுகளைத் திரும்பப்பெற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வந்த பின்னர், பெரிய மதிப்பிலான ரூ.500, ரூ.1,000, ரூ.2,000 மதிப்பிலான நோட்டுகள் தேவையற்றது எனவும், அப்போது தான் ஊழலை ஒழிக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் அரசாங்கம் சார்பில் கடப்பாவில் நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு; உலகில் […]