திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியே வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றிபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்; அதிமுக பாஜகவுடன் உறவில் இருந்த நிலையில், இனி பாஜகவுடன் சேர போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்தார். இப்போது மீண்டும் பாஜகவுடன் இணைந்திருக்கிறார். அப்படி இணையவேண்டிய கட்டாயம் என்ன? பாஜக […]

தாழ்வான பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து, முதலில் பணிகளை முடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில், தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். […]

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திருச்சி சிவாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டாலினையும் விமர்சித்துள்ளார். காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.. ஏசி இல்லாமல் காமராஜர் தூங்கமாட்டார் என்று அவர் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருச்சி சிவாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது […]

பெருந்தலைவர் காமராஜர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும் கலகமூட்டி குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.. பெருந்தலைவர் காமராஜர் குறித்து திமுக எம்.பி திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன் தினம் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும் அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து […]

காமராசரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசியதற்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக செயல்தலைவர் அன்புமணி ராமதாஸ் காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசிய சர்ச்சை கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவராக போற்றப்பட்டும்  பெருந்தலைவர் காமராசர் அவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் திமுக  துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான  திருச்சி […]

அதிமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்டுகள் வர வேண்டும் என்ற இபிஎஸ்-ந் அழைப்பை நிராகரித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் […]