2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் அடுத்தடுத்து நிகழும் சில நிகழ்வுகள் பேசு பொருளாக மாறி உள்ளன.. முதலில் மோடி, அமித்ஷாவை சந்திக்க முடியாத்தால் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ் வெளியேறினார்.. ஒன்றுபட்ட அதிமுக என்பதே தனது நோக்கம் என அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.. ஓபிஎஸ் வெளியேறிய […]

மத்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான பி. சிதம்பரம் வரவேற்றுள்ளார், ஆனால் இந்த நடவடிக்கை “8 ஆண்டுகள் தாமதமானது” என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் விகிதங்களை முதலில் அறிமுகப்படுத்தியிருக்கக்கூடாது என்றும், எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைகளுக்கு எதிராக பலமுறை எச்சரித்து வந்தாலும், அவர்களின் வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன என்றும் கூறினார். […]

திண்டுக்கலை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானது உள்ளிட்டவற்றை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த தேர்வு முறை தவறானது என்றும், கட்சி விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி […]

நடிகர் விஜய், தான் முழுமையாக அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்ததில் இருந்து அவரது ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. அவர் தற்போது நடித்து வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்க உள்ளார். விஜய் நடத்திய இரண்டு மாநில மாநாடுகளிலும், தனது அரசியல் எதிரிகள் […]

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் அண்ணன், இதுகுறித்து வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். வேலூர் கஸ்பா பயர் லைன், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 50 வயதுடைய என்.சீனிவாசன் என்பவர் குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், […]

ஆம்புலன்ஸ் வாகனங்களை தாக்கியது யாராக இருந்தாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த 108 அவசர ஊர்தி ஓட்டுநர் இருளாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், நான் கடந்த 16 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18.08.2025 வேலூர் மாவட்டத்தில் அணைப் பகுதியில் […]

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன் தெரிவித்த ரூ.30,000 கோடி குற்றச்சாட்டு குறித்து அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் மதுரை மத்திய & தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி; “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன்பு முதல்வரின் மருமகன் சபரீசனும், துணை […]

டெல்லியில் அமித்ஷா இல்லத்தில் தமிழக பாஜக உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் கொண்டனர்.. எனினும் இதில் அண்ணாமலை பங்கேற்கவில்லை.. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. தேர்தல் நெருங்கி வரும் […]