fbpx

நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்கத் தொடங்கிவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசினார். “அப்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கைகளை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்கு உண்மையான இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் …

அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கப்படும் என்றும் இத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே நேரில் சென்று சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டு உரிய சிகிச்சையும் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தமிழகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை விநியோகிக்கும் …

“தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் இன்று நடைபெறுகிறது. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பருவமழைக் காலம் என்பதால் மழைக் கால தொற்றுகளில் …

மின் கட்டண கணக்கீடு சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மழை பாதிப்பு ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுங்கம் சந்திப்பு- வாலாங்குளம், பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மின்சாரத்துறை …

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதற்கு இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த …

கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், திமுக தலைவர் முக.ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற …

வீட்டுக்கு வீடு தேசியக் கொடியேற்றக் கூறும் பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸின் அலுவலகத்தில் ஏற்றுவாரா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை மத்திய அரசு அமுத பெருவிழாவாக கொண்டாட தயாராகி வருகிறது. குறிப்பாக, சுதந்திர தின விழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றங்களை செய்துள்ளது. கைத்தறி பருத்தி துணியால் மட்டுமே …

துணை குடியரசுத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார்.

குடியரசு துணைத்தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் கர்நாடகாவைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வாவும் போட்டியிட்டனர். இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். …

குமாரபாளையத்தில் காவிரி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வந்த, அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சூழ்ந்து கொண்டு, பெண்கள் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பினர்.

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் …

நிலம் தந்த குடும்பத்தினருக்கு என்.எல்.சி பணிகளில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்! தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய …