fbpx

திமுக மட்டும்தான் மிகவும் புத்திசாலித்தனமான கட்சி என நினைக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.

இலவசங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடந்து வருகிறது. இதில், ஏற்கெனவே திமுக சார்பில் இலவசங்களை அளிப்பதற்கு ஆதரவு நிலைப்பாட்டுடன் …

மதிய உணவு திட்டம் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டமானது பெருந்தலைவர் காமராஜரால் அறிவிக்கப்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட திட்டமாகும். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா …

நலத் திட்டங்கள் என்பது வேறு, இலவசங்கள் என்பது வேறு, இவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தி.மு.க அறிவித்த 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், பாதிக்கும் மேற்பட்டவை தேவையில்லாத இலவசங்கள் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இலவசங்களையும், …

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான ரூ. 10,696 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறையை தன்வசம் வைத்திருக்கும் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், எந்தவிதமான அரசு உதவி தொகையும் பெறாத 21 முதல் 57 வயது வரையிலான வறுமைக்கோட்டிற்கு …

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அம்மன் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி …

சட்டமன்ற தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 முக்கிய பிரச்சனைகளை எம்.எல்.ஏக்கள் அனுப்பி வைக்க வேண்டும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் விரிவுபடுத்தப்படுவது குறித்த முக்கியமான அறிவிப்பிளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்காக இந்த ஆண்டே 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, …

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பார்க்க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில்; புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் …

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை வரவேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை …

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அர்ஜூனமூர்த்தி நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். இந்நிலையில் அவரை கட்சியில் அடிப்படை உறுப்பினராக்கி கட்சி அடையாள அட்டையை பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

இதைதொடர்ந்து அண்ணாமலை நிருபர்களுக்கு …

புனேவில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் கேபிஐடி லிமிடெட் இணைந்து உருவாக்கிய ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டது.

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த பேருந்தினை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார். பின்னர், உரையாற்றிய அவர், ”பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஹைட்ரஜன் தொலைநோக்கு’ இயக்கம் துறையில் இந்தியா ஆத்ம …