fbpx

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமராவின் மகளும், சந்திரபாபு நாயுடுவின் உறவினருமான கே. உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உமா மகேஸ்வரி கடந்த சில மாதங்களாக …

சென்னை, கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்ததால் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கியப் பணி மற்றும் எழுத்தாளுமையை போற்றும் விதமாக கருணாநிதி பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை …

ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென தீவிர சிகிச்சை பிரிவில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 3 பேர் …

அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து தலைமை தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் இடைக்காப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதனை ஓபிஎஸ் அணியினர் ஏற்க மறுத்து தாங்கள்தான் உண்மையான அதிமுக எனக் கூறி …

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்தவரும், திமுகவின் தலைவருமாக இருந்தவர் மு.கருணாநிதி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவை அடுத்து திமுகவின் …

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, “விலைவாசி உயர்வு ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது. பெட்ரோல்-டீசல், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெட்ரோல், டீசலுக்கு மட்டும் செலவழிக்க வேண்டியுள்ளது. …

சென்னை அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பசுமை வழி விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் குறித்தும் நிதி ஒதுக்கீடு, இடம் தேர்வு குறித்தும் மாநிலங்களவையில் உறுப்பினர் கனிமொழி சோமு எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். …

தேர்தல் ஆணையக் கூட்டத்தில் கோவை செல்வராஜ் எந்த கட்சி சார்பில் பங்கேற்றார் என்பதை தேர்தல் ஆணையத்திடம்தான் கேட்க வேண்டும் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை …

அச்சு முறிந்து கவிழ்ந்து விபத்து ஏற்படும் நிலையில் இருந்த தேருக்கு மாநில பொதுப்பணித் துறை எப்படி நற்சான்றிதழ் கொடுத்தது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சை, தர்மபுரி, உளுந்தூர்பேட்டை எனத் தொடர்ச்சியாகத் தேர் விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சரும், அதிகாரிகளும், திருக்கோயில் தேர்களின் …

’என்னை வீட்டுக்கு போகச் சொல்லாதீர்கள்… ஏனெனில் எனக்கு வீடு இல்லை’ என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, ”அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படுவது வேதனை அளிக்கிறது. போராட்டங்கள் நடத்துவதால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. போராட்டக்காரர்கள் தன்னை வீட்டுக்குப் …