fbpx

சுங்கச்சாவடி மாதாந்திர பயண அட்டைக்கான நடப்பு நிதியாண்டு கட்டணமாக 315 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். அதில், ”தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிமுறைகள் 2008-ன் படி, தேசிய நெடுஞ்சாலை, நிரந்தர பாலம், புறவழிச்சாலை அல்லது சுரங்கப்பாதை …

வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த செஸ் வீரர்கள் யாருக்கும் குரங்கு அம்மை நோய் தொற்று இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள குரங்கம்மை பரிசோதனை மையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து …

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது..

கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு …

தமிழகத்தில் மீதமுள்ள 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசு கைவிரித்த நிலையில், தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் 75 மருத்துவக் கல்லூரிகளும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் …

’டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வது உறுதி’ என ஓபிஎஸ் ஆதரவாளர் தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துவிட்டு நெல்லை திரும்பிய மாவட்ட ஓபிஎஸ் அணி செயலாளர் தர்மலிங்கத்திற்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பேசிய அவர், நெல்லை மாவட்டத்தில் 1989ஆம் ஆண்டிலிருந்து ஜெயலலிதாவின் ஆசியுடன் கட்சியில் பல்வேறு …

பசு, கன்று, எருது உள்ளிட்ட இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2021-22ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாட்டு இறைச்சிகளின் மொத்த அளவு என்ன? மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலக அளவில இந்தியாவின் தரவரிசை எண் என்ன? மாட்டிறைச்சி ஏற்றுமதியின் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிக்க மத்திய அரசு …

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர், சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற …

பண்ருட்டியில் கபடி விளையாட்டின்போது உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரிய புறங்கணிமுருகன் கோவில் தெருவைச் சேர்ந்த கபடி அணி வீரர் விமல்ராஜ் நேற்றிரவு பண்ருட்டி அருகே மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். உடனே …

ஊடகத்தில் தன் முகத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை தொடர்ந்து பொய் புகார்களை கூறி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”ஏழை மக்களை பாதிக்காத வகையிலேயே தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படுவதாகக் கூறிய …

தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதால், அதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில், கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

அந்த ஆர்பாட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த கடிதம் எழுதியுள்ளதாகக் கூறும் அமைச்சர் செந்தில்பாலாஜி அந்த கடிதத்தைக் …