fbpx

கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு பட்டியலினத்தவர்கள் காரணம் என்ற முடிவுக்கு உளவுத்துறை வந்தது எப்படி? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது என்பது மீண்டும் ஒரு முறை மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தைக் கள்ள மவுனத்துடன் பார்த்துக் …

திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து, தடையறத் தக்க, மீகாமன், தடம் …

மதுபானங்களை ஒழித்துவிட்டு கஞ்சா, பாங்கு பயன்படுத்துவதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய பாஜக எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி, ”காங்கிரஸ் ஆட்சியில் சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. எங்குப் பார்த்தாலும் கொலை, …

அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கவில்லை என்றும் அவர் இன்றும் அதிமுகவில் தான் உள்ளார் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், குன்னம் இராமச்சந்திரன், தர்மர், பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் …

அரசியல் கட்சிகள் மற்றும் மாநில அரசுகள், இலவசங்களை வாக்குறுதிகளாக வாக்காளர்களிடம் வழங்குவதை தடுக்க வழி இருக்கிறதா என்பதை கண்டறியுமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் வாய்மொழியாக கேட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என அஷிவினி உபாத்யாய் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது உச்சநீதிமன்ற தலைமை …

தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் தற்போது துரோக யுத்தம் நடத்தி வருவதாகச் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் திமுக அரசை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பேசிய அவர், ”தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் தற்போது துரோக யுத்தம் நடத்தி வருகிறார். தேனி மாவட்டத்திற்குள் நுழைய முடியுமா? …

மின்கட்டண உயர்வை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்றும், அதைக்கண்டித்து தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, அதிமுகவினர் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் சண்முகம் …

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக எந்த தொகையும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கடந்த 2 நாட்களாக பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வீடுகளுக்கு பொறுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் என தவறான …

ஓபிஎஸ் மகன் தேர்தலில் வென்றால் அரசியலுக்கு முழுக்கு போடுவதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்..

கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் …

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி பேரணி செல்ல முயன்றதால் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்..

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று பேரணியில் ஈடுபட்டனர்.. காங்கிரஸ் எம்.பி …