fbpx

அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று ஓபிஎஸ் ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளார்..

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னதாக பொருளாளர் தாக்கல் செய்ய வேண்டிய வரவு, செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் …

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற மண்டல ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் முதல் பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். …

”எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையேயான பிரிவு அண்ணன் – தம்பி பிரிவு போன்றது” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி, கோவில்பாப்பாகுடி பகுதிகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பள்ளி கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக அமைப்புச் செயலாளர் செல்லூர் …

கடந்த 60 ஆண்டுகளில், அடுத்த 3-4 தலைமுறைகளுக்கு நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தியின் பெயரில் நாம் சம்பாதித்து விட்டோம் என்று காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-வும், கர்நாடக சட்டசபையின் முன்னாள் சபாநாயகருமான கே.ஆர்.ரமேஷ் குமார், பெங்களூருவில் உள்ள Freedom Park-ல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணையை எதிர்த்து …

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஜூன் மாதம் முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அண்மையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பின் கடந்த 18ஆம் தேதி மீண்டும் …

கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லுமா? செல்லாதா? என்பது தொடர்பான வழக்கு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை வருகிறது.

சென்னை வானகரத்தில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்கக் …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் மதுரையில் நடைபெறும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, அரசு திட்டங்களை தொடங்கி வைப்பது, அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தார். …

அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”சொத்து வரி, மின்சாரம், பால் என அனைத்தையும் விலை உயர்த்தியதுதான் திமுக அரசின் சாதனை. தவறை சுட்டிக் காட்டினாலும், பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத அரசு இந்த …

மின் கட்டண உயர்வுக்கு ஒன்றிய அரசும், முந்தைய அதிமுக அரசும் தான் காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்..

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 18-ம் தேதி அறிவித்தார்.. எனினும், வீட்டு இணைப்பிற்கான 100 யூனிட் இலவச மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை …

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதைத் தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அவரது ஆதரவாளர்கள் வீட்டிற்கு சென்ற வண்ணம் …