தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம்‌ மூலம் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள்‌ விற்பனை செய்யப்படமாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மாநில வாணிபக்‌ கழகத்தினால்‌ 101 இடங்களில்‌ வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள்‌ செயல்பட்டு வருகிறது. இந்த சில்லறை விற்பனைக்‌ கடைகளில்‌ விற்பனை விலையை விட கூடுதல்‌ விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும்‌ புகார்களை […]

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த பதில்தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுகவில் 2 முறை தர்மயுத்தம் நடத்திப் பார்த்தும் தோல்வியைத் தழுவிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக இப்போது எடப்பாடி பழனிசாமி வசமாகிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ஆனாலும், இன்னமும் ஏதோ சில நம்பிக்கைகளில் அதிமுக நானே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]

கர்நாடக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 3 நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தக்ஷின கன்னடா, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். உடுப்பியில் உள்ள கபு என்ற இடத்தில் மீனவர் அமைப்பினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ”கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. பல […]

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் இணை பொறுப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக தமிழ் தாய் வாழ்த்து ஒலித்தது. அப்போது திடீரென்று குறுக்கிட்ட கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நிறுத்துமாறு அறிவுறுத்தினார், இதனால் திடீரென்று மேடை அமைதியானது. […]

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பி பி ஜி சங்கர் (42) இவர் பாரதிய ஜனதா கட்சியின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளராக செயல்பட்டு வருகிறார். இவர் மீது 15க்கும் அதிகமான வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், தான் நேற்று இரவு தன்னுடைய 4 சக்கர வாகனத்தில் ஓட்டுநருடன் சென்னையில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தார் […]

சென்னையில் இருந்து விமானத்தில்‌ டெல்லிக்கு புறப்பட்டார்‌ முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌. குடியரசுத்‌ தலைவர்‌ திரெளபதி முர்முவை சந்திக்க சென்னையில் இருந்து விமானத்தில்‌ டெல்லிக்கு புறப்பட்டார்‌ முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌. கிண்டியில்‌ கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க இன்று காலை 11:30 மணிக்கு குடியரசுத்‌ தலைவர்‌ திரெளபதி முர்முவை சந்தித்து அழைப்புவிடுக்க உள்ளார் முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌. சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு […]

பிரதமர் நரேந்திர மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் வருகின்ற மே 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் நேற்று பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடி ஒரு விஷ […]

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசு போக்குவரத்துப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் ராகுல் காந்தியின் தேர்தல் […]

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் சென்னையில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக சென்னை விமான நிலையம் சென்றார். அமைச்சர்கள், அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர். ஆனால் டெல்லி […]

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் ஆடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மகன் மற்றும் மருமகன் 30,000 கோடி ரூபாயை ஒரே வருடத்தில் சம்பாதித்து இருக்கிறார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதை போல் இருந்தது. அதன் பின்னர் இரண்டாவது ஆடியோவில் திமுக கட்சி அவர் விமர்சிப்பது போல இருந்தது. ஆனால் அமைச்சர் பழனிவேல் […]