திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆறுதல் கூறினார். திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த வழக்கில் 6 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது.. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை […]

சேலம் மேற்கு தொகுதியைச் சேர்ந்த பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையைத் தொடர்ந்து ஆதரித்து வந்த அருள், சமீபத்தில் ஒரு பேட்டியில், அன்புமணி ராமதாஸுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். “கட்சியில் ராமதாஸ் இருக்கும்வரை தலைவராக அவரே தொடர்வார், அதன் பிறகுதான் அன்புமணி பதவி […]

என்னை பற்றிய அவதூறுகளை பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் திருமணங்களை நடத்தி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ அறநிலையத்துறை நிகழ்ச்சிகளில் நான் அதிகமாக பங்கேற்கிறேன். 997 திருக்கோயில்களுக்கு சொந்தமான 7420 கோடி […]

லாக்கப் மரணங்கள் ஆளும் கட்சியால் நடக்கிறது எனச் சொல்ல முடியாது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், குடியரசுத் தலைவர் ஆட்சியே இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தான் நடக்கிறது என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட […]

ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்திட உதவ வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் பெண்ணின் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை உள்ளிட்டோர், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனு குறித்து இறந்த பெண்ணின் தந்தை அண்ணாதுரை கூறியதாவது; திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி […]

தொழிற்சாலைகள், குடிசை மற்றும் குறுந்தொழில்கள் உள்ளிட்டவற்றுக்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தை அரசே மானியமாக வாரியத்துக்கு வழங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தில் வீட்டு மின்நுகர்வோரைத் தவிர தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள லிஃப்ட், உடற்பயிற்சிக் கூடம் […]

இளைஞர் அஜித் படுகொலை வழக்கிலிருந்து, காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதா..? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் […]

தமிழ்நாட்டை உலுக்கிய அஜித்குமார் மரணம் லாக் அப் டெத் கிடையாது. இதை சாத்தான்குளம் சம்பவத்தோடு ஒப்பிட முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மதுரை அருகே திருப்புவனம் பகுதியில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலியில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். திருட்டு வழக்கு தொடர்பாக இவரை விசாரிக்க போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இதன்பின் அவரது வீடுகளில் சோதனை மேற்கொண்ட போலீசார், இவரின் தம்பியையும் அழைத்து சென்று விசாரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் […]