பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க அனைத்து ஊர்களிலும் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் குலாம் தஸ்தகீர் மீது போதைக் கும்பல் பெட்ரோல் ஊற்றி […]

புதுச்சேரியில் பாஜக நியமன MLA-க்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமலிங்கம், வெங்கடேசன், ரமேஷ் பாபு ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை சபா நாயகரிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இவர்கள் ராஜினாமா செய்ததற்கான தெளிவான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், பாஜக மாநிலக் குழுவில் இடம்பெறும் உள்கட்சி முரண்பாடுகள், அமைச்சரவை பதவிக்கு இடமாற்றங்கள், மற்றும் அணிச்சேர்க்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட […]

பாமக நிறுவனரை சந்தித்தது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை இன்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுவதால் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அவர் சந்தித்தாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மரியாதை நிமித்தமாகவே ராமதாஸை சந்தித்தாக செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]

எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆங்கில நாள்தழுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்று மீண்டும் உறுதிபட தெரிவித்தார். அதிமுகவில் பிரிந்து சென்ற யாரையும் ஒன்றிணைக்கவில்லை என்றும், அவர்கள் கட்சி விவகாரத்தை அவர்களே பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் தேசிய […]

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் பொதுச்செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் முதல் இரண்டு முக்கிய பொறுப்புகள் என்பது தலைவர் பதவியும் பொதுச் செயலாளர் பதவியும் தான். தி.மு.க. தலைமையில் இருந்து வெளியாகும் அனைத்து அறிவிப்புகளும் பொதுச்செயலாளர் பெயரில்தான் வெளிவரும். ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே தலைவர் பெயரில் வரும். இந்த பொறுப்பில் நீண்ட காலமாக இருந்து வந்தவர் […]

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதல்முறையாக அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது அடுத்த கட்ட திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படத் தொடங்கியுள்ளது. ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பை முடித்துவிட்ட விஜய், தற்போது முழுநேர அரசியலுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் உறுதியாகின்றன. இந்நிலையில், வருகிற ஜூலை 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை பனையூரில் உள்ள தலைமை செயலகத்தில் […]

2026 தேர்தலில் பாமக பாஜக இடம்பெறும் கூட்டணியில் விசிக நிச்சயம் இடம்பெறாது என திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைக் கூட்டணியில் இணைக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது. அதேநேரம், திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவன் […]

பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2800-க்கும் அதிகமான கட்சிகள் உள்ளன. இவற்றில் பல இந்த நிலையை தொடர்வதற்கு தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்பது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து இத்தகைய அரசியல் கட்சிகளை அடையாளம் காண நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதுவரை 345 […]

நியாயவிலைக்கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலா..? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் அவர்களை தமிழக அரசு ஏமாற்றி வருகிறது. தமிழ்நாட்டு மக்களில் ஒரு தரப்பினரின் வாக்குகளை வாங்குவதற்காக வாக்குறுதிகளை அளித்து விட்டு, வெற்றி பெற்ற பிறகு […]

திமுகவின் கையாலாகாத்தனத்தை மறைக்க ரயில் கட்டண உயர்வு என முதல்வர் நாடகமாடுகிறார் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்; சென்னை, வேலூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், திமுக அரசால் தாமதமாகியிருக்கின்றன. சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவது தொடங்கி, சாலை அமைக்க மூலப் பொருள்கள் கிடைப்பது வரை, திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், சாலைப் பயணம் தனக்கு சொகுசாக […]