ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார், அஇஅதிமுக-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், […]

நாளொரு வேஷம், பொழுதொரு நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின் முழு நேரமாக நடிக்க செல்லலாம் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் திரு. குலாம் தஸ்தகீர் அவர்கள் மீது, போதைக் […]

உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கொல்லம்பரம்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஆவார். இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். உள்ளாட்சித் தேர்தலில் முன்விரோதம் காரணமாக முத்து பாலகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த […]

என் மூச்சிருக்கும் வரை நான் தான் பாமக தலைவர் என்று ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாமக தலைமை பொறுப்பு தொடர்பாக ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், அன்புமணியுடன் கருத்து வேறுபாடு விவகாரத்தில் இன்னும் முடிவு வரவில்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “ சமரசம் பேசுகிறோம்.. பேசிக்கொண்டே இருக்கிறோம்.. எல்லா பிரச்சனைக்கும் முடிவு […]

2026 தேர்தலில் விசிகவுக்கு அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கத் தயார் என இபிஎஸ் தூது விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியான வைகை செல்வன் சந்தித்து கொண்டனர். அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட்டு 2 மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இரு கட்சியின் நிர்வாகிகளும் தங்களது கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் என்று கூறி வருகின்றனர். […]

தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த சில மாதங்களாக நிர்வாகப் பதவிகள் தொடர்பாக சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகியான ஹரிஷ், கட்சியை விட்டு வெளியேறியுள்ளார். “13 வருடமாக உயிரையே வைத்து உழைத்தேன்… இனி இந்த கட்சி வேண்டாம்!” எனக்கூறிய ஹரிஷ், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விஜய் மீது உண்மையான நம்பிக்கையோடும், தொண்டுமனப்பான்மையோடும் செயல்பட்டதாகக் கூறும் ஹரிஷ், பொதுச்செயலாளர் ஆனந்த் பணம், சாதி […]

தமிழக பாஜகவில் மீனாவுக்கு மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவில் மாநில அளவில் நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை டெல்லி தலைமைக்கு அனுப்பி இருந்தார். இந்த சூழலில் […]

பாலியல் புகார் அளிக்க சென்ற கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர்கள் தாக்கிய விவகாரம் அரசியல் ரீதியாக பேசுபொருளாகிய நிலையில், இச்சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் கொடூரமாக தாக்கியதாக வெளிவந்துள்ள காணொளி […]

திமுகவின் உயர்மட்ட பொறுப்புகளில் ஒன்றான பொதுச் செயலாளர் பதவியில் தற்போது துரைமுருகன் உள்ளார். விரைவில் அந்த பதவியிலிருந்து அவர் விலக்கப்பட்டு டி.ஆர்.பாலு நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் முதல் இரண்டு முக்கிய பொறுப்புகள் என்பது தலைவர் பதவியும் பொதுச் செயலாளர் பதவியும் தான். தி.மு.க. தலைமையில் இருந்து வெளியாகும் அனைத்து அறிவிப்புகளும் பொதுச்செயலாளர் பெயரில்தான் வெளிவரும். ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே தலைவர் பெயரில் வரும். இந்த பொறுப்பில் […]

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வில் 4% இடஒதுக்கீடு வழங்குதல் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1996 பிரிவு 34ன் படி, அரசு பணியில் இருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில், 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில், 4 […]