நேற்றைய தினம் கர்நாடகா மாநிலத்தில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமி தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு கடுமையான காய்ச்சலும், தலைவலியும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதே போல் கடந்த நவம்பர் மாதம் புனேவில் 67 வயது நபருக்கு ஜிகா வைரஸ் கண்டறிந்து சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்தார். கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள‌து. முதன்முதலில் 1947ம் ஆண்டு உகாண்டாவில் ஜிகா […]

இந்தியாவில் காருக்குள் வைத்து ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கோ அல்லது ஒரு பெண் ஆணிற்கோ முத்தம் கொடுத்தால் அது இந்திய சட்டப்படி தவறான ஒரு விஷயம் ஆகும். என்னது இந்தியாவில் காரில் முத்தமிடுவது குற்றமா..? என்ற கேள்வி பலரின் மனதில் எழலாம். அது தொடர்பான சட்ட விதியை பார்க்கலாம். உண்மையில், காரில் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பது குறித்து நேரடி சட்டம் எதுவும் இல்லை. ஆனால், […]

மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மிக முக்கிய திட்டமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் […]

இளைஞர் ஒருவர் ஹைபர் ட்ரிகோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு கரடிபோல் உடல் முழுவதும் முடி இருந்ததை ஏளனம் செய்த நிலையில் தன்னம்பிக்கைதளராது முன்னுதாரணமாக உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் நாண்ட்லெட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் உடல் முழுவதும் ரோமங்களைக் கொண்டு கரடிபோன்ற தோற்றத்தில் இருக்கின்றார். இதற்கு காரணம் ஹைபர் ட்ரிகோசிஸ் என்ற நோய்தான். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் ரோமம் வளரும். உடல் முழுவதும் குறிப்பாக […]

வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு நிம்மதி தரும் வகையில் சமீபத்தில் மத்திய அரசு மாதிரி குத்தகை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. புதிய சட்டத்தை உருவாக்குவதன் மூலமோ அல்லது தற்போதுள்ள குத்தகைதாரர் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்வதன் மூலமோ இதை செயல்படுத்தலாம். அந்த வகையில் மாதிரி குத்தகை சட்டத்தில், மாநிலங்களில் தொடர்புடைய அதிகாரத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவு உள்ளது. வாடகை சொத்துகள் தொடர்பான எந்தவொரு சர்ச்சையையும் விரைவாகத் தீர்ப்பதற்கு வாடகை நீதிமன்றங்கள் […]

தென்னிந்தியாவின் முதல் பேசும் படம் ’காளிதாஸ்’ வெளியாகி இன்றுடன் 91 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் இந்தப்படத்தை தற்போது பார்க்க முடியாது என்பது சற்றே வருத்தப்பட வைக்கின்றது. தென்னிந்தியாவின் முதல் பேசும் படமான ’காளிதாஸ்’ 1931ம் ஆண்டு அக்டோபர் 31ல் இதே நாளில் வெளியானது. 91 ஆண்டுகளை கடந்துவிட்ட இத்திரைப்படத்தை தயாரிக்க ரூ.8000 செலவாகியுள்ளது. ஆனால், இத்திரைப்படத்தில் தயாரிப்பு நிறுவனம் பெற்ற லாபம் ரூ.75,000 ஆகும். முதல் பேசும் படத்தில் 50 […]

உள்நாட்டிலேயே ஆடுகளுக்கு மவுசு அதிகரித்துள்ள நிலையில் வெளிநாடுகளில் ஆடுகளுக்கு கூடுதல் வரவேற்புதான் அதை வெளிநாடுகுளில் பிற நாடுகளுக்கு  எவ்வாறு ஏற்றுமதி செய்கின்றார்கள் என்பதை பற்றி இதில் பார்க்கலாம். தாவரங்களை உண்டு வாழும் பாலூட்டியான ஆடு தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவை தாயகமாக கொண்ட ஆடு மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாகும். ஆடுகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளது. ஆடுகள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே […]

மக்கள் குறைதீர்ப்புக்காக சிறப்பு இயக்கம் 2.0-ஐ தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின், தொழிலாளர் நலத்துறை சென்னை அலுவலகம் நடத்துகிறது. பீடி, சுண்ணாம்பு, கனிம சுரங்கம் மற்றும் சினிமா துறையை சேர்ந்த தொழிலாளர்கள், மத்திய அமைச்சகத்தின் வலைதளமான https://labour.gov.in/ -ல் தங்களின் தகவல்களை அடிக்கடி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பீடி, சுண்ணாம்பு, கனிம சுரங்கம் மற்றும் சினிமா துறையை சேர்ந்த தொழிலாளர்கள், நிர்வாகம், மருத்துவமனை பராமரிப்பு, மருந்துகள் வழங்கல், நலத் […]

மனிதர்களாகிய நாம் உயிர்வாழ உணவு இன்றியமையாத ஒன்று… அந்த உணவு உலக அளவில் மிகப்பெரியஅளவிலான வர்த்தகத்தை கொண்டுள்ளது. சத்தான உணவுக்காக நாம் என்ன வெல்லாம் செய்ய வேண்டி உள்ளது. விலைவாசி கூடும் நேரத்தில் அந்த உணவை நாம் பாதுகாக்க வேண்டும். பணம் இருப்பவர்கள் எவ்வளவு பணம் கொடுக்கின்றோம் என்பதை கணக்கில்வைத்துக் கொள்வதில்லை  கணக்கில்லாமல் எதை வேண்டுமானாலும் எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுத்து வாங்கத் தயாராகிவிட்டனர். இன்று பணம் இருக்கின்றது வாங்குகின்றோம்! […]

80 மற்றும் 90 களில் தாங்கள் தயாரிக்கும் அனைத்து படங்களிலும் எப்படியாவது சில்க் ஸ்மிதாவை புக் செய்து விட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்களும் ஆசைப்பட்ட ஒரே நடிகை சில்க் ஸ்மிதா தான்.. ஏனெனில் சில்க் ஸ்மிதாவின் பாடல் இருந்தால் படம் ஹிட்டாகி விடும் என்பதே அப்போது தயாரிப்பாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.. சில்க் ஸ்மிதா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, அவரின் சொக்க வைக்கும் பார்வை, அவரது […]