வீட்டிற்கு முன் காகம் கரைந்தால் அபசகுணமா..? முன்னோர்கள் சொன்னது என்ன..? அதிர்ச்சி தகவல்..!!

Crow 2026

முன்னோர்கள் காலம் தொட்டே பின்பற்றி வந்த கோலமிடுதல், காகத்திற்கு உணவிடுதல், முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தல் மற்றும் திருஷ்டி கழித்தல் போன்ற பல பாரம்பரிய பழக்கவழக்கங்களை இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் மூடநம்பிக்கைகளாகக் கருதிப் புறந்தள்ளி வருகின்றனர். அந்த வகையில், வீட்டின் முன் காகம் உட்கார்ந்து கரைந்தால் வீட்டிற்கு விருந்தினரோ அல்லது உறவினர்களோ வரப்போகிறார்கள் என்ற காலம்காலமாக நிலவி வரும் நம்பிக்கையும் மூடநம்பிக்கையாகவே பார்க்கப்படுகிறது.


ஆனால், இந்த நம்பிக்கைக்குப் பின்னால் பண்டைய தமிழர்களின் வியக்கத்தக்க கடல்சார் வணிக வரலாறும் அறிவியல் பூர்வமான செய்தித் தொடர்பு முறையும் பொதிந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சங்க இலக்கியங்களில் ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ மற்றும் ‘முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை’ என்பதன் மூலம், அக்காலத்தில் பெண்கள் கடல் கடந்து செல்ல அனுமதிக்கப்படாத சூழலில், ஆண்கள் மட்டுமே பெருங்கடல் கடந்து வெளிநாடுகளுக்கு வாணிபம் செய்யச் சென்றது தெளிவாகிறது. அவ்வாறு மரக்கலங்களில் கடற்பயணம் மேற்கொண்ட பண்டைய தமிழர்கள், நடுவானிலும் பெருங்கடலிலும் திசையையும் நிலப்பரப்பையும் கண்டறியும் நவீன கருவிகள் இல்லாத காலகட்டத்தில், தங்களது கப்பல்களில் காகங்களை கூண்டுகளில் அடைத்து உடன் எடுத்துச் சென்றனர்.

நடுக்கடலில் கரை எங்குள்ளது என்பதை அறியக் காகத்தைப் பறக்கவிடும் போது, அது நிலப்பரப்பு இருக்கும் திசையை நோக்கிப் பறந்து செல்லும்; அந்தத் திசையைப் பின்பற்றியே மாலுமிகள் தங்களது கப்பல்களைச் செலுத்தி கரையை அடைந்தனர். இவ்வாறு நடுக்கடலில் இருந்து பறந்து வரும் காகங்கள் கரையை அடைந்து கிராமப் பகுதிகளில் ஒலி எழுப்பும் போது (கரையத் தொடங்கும் போது), தங்களது பகுதியை நோக்கித் தொலைதூரக் கடல் வழியாக வாணிபம் முடித்து உறவினர்களோ அல்லது விருந்தினர்களோ கப்பலில் வருகிறார்கள் என்பதை நிலப்பரப்பில் இருந்த மக்கள் முன்கூட்டியே உணர்ந்து கொண்டனர்.

இத்தகைய வரலாற்று நிகழ்வுகளை சங்ககால பெண் புலவர் காக்கைபாடினியார் தனது பாடல்களில் பதிவு செய்துள்ளதோடு, இராமநாதபுரம் அருகேயுள்ள அழகன்குளம் அகழாய்வுப் பாறை ஓவியங்களிலும் இச்செய்தி சித்திரமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் திசைகாட்டியாகவும் தகவல் தொடர்பு பாலமாகவும் பயன்பட்ட இந்த நடைமுறை, பிற்காலத்தில் நவீனத் தகவல் தொடர்பு கருவிகள் வந்த பிறகு வெறும் நம்பிக்கையாக மாறிப்போனதே தவிர, இது அறிவியலும் வரலாற்று உண்மையும் கலந்த தமிழர் மரபு என்பதை வரலாற்றுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

Read More : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்..!! புதிய பாடத்திட்டம், ஏஐ கல்வி..!! அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்..!!

Next Post

இப்படி ஒரு விநாயகரை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீங்க..!! தமிழ்நாட்டில் ஒளிந்திருக்கும் 7 விசித்திர தலங்கள்..!!

Tue Aug 25 , 2026
முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் மரத்தடி முதல் மாபெரும் ஆலயங்கள் வரை எங்கும் வீற்றிருந்தாலும், தனித்துவமான வரலாற்றுச் சிறப்பும் அபூர்வ ஆற்றலும் கொண்ட சில குறிப்பிட்ட தலங்கள் மனித வாழ்க்கையில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஆன்மிகத்தில் நம்பப்படுகிறது. அந்த வகையில், பாறையில் வடிக்கப்பட்ட 6 அடி உயர வலம்புரி விநாயகராகவும் கையில் சிவலிங்கம் ஏந்திய திருக்கோலத்திலும் அருள்பாலிக்கும் புகழ்பெற்ற 1,600 ஆண்டுகள் பழமையான சிவகங்கை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம், […]
Vinayagar 2025

You May Like