திருமண தடைகள், கண் திருஷ்டிகள்..!! குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்..!!

God 2026

ஒரு மனிதனின் வாழ்வு மேன்மையடையவும் குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்கவும் குலதெய்வத்தின் அருள் மிகவும் இன்றியமையாதது என ஆன்மிக சாஸ்திரங்கள் கூறுகின்றன. வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி குலதெய்வத்தின் பரிபூரண ஆசியைப் பெறுவதற்குச் சில குறிப்பிட்ட எளிய படையல் வழிபாடுகள் அளப்பரிய நன்மைகளைத் தரும் என ஆன்மிக வல்லுநர்கள் வழிகாட்டுகின்றனர்.


அதன்படி, குலதெய்வத்திற்கு தேங்காய் வைத்து வழிபட எடுக்கும் புதிய முயற்சிகளில் உள்ள தடைகள் அகலும்; சர்க்கரைப் பொங்கல் படைக்கப் பணவரவு அதிகரித்து விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி நிலவத் தயிர் நைவேத்தியமும், தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டி தோஷங்கள் விலக எலுமிச்சம்பழமும் படைத்து வழிபடலாம். அதேபோல், குலதெய்வத்திற்கு மலர்மாலை சாற்றுவது மனமகிழ்ச்சியையும் நினைத்த காரிய வெற்றிகளையும் தரும்.

மேலும், திருமணத் தடைகள் நீங்கி மங்கள நிகழ்வுகள் கைகூட மஞ்சள் மற்றும் குங்குமம் சமர்ப்பித்து வழிபடுவது சிறந்தது; இது குடும்பப் பெண்களின் வாழ்க்கையை மேன்மையடையச் செய்வதுடன் திருமண வாழ்வைச் சிறக்க வைக்கும். உடல் ஆரோக்கியம் மற்றும் மன அமைதி பெறப் பால் சமர்ப்பித்தும், இல்லத்தில் செல்வ வளம் பெருகி புதிய நல்வாய்ப்புகள் உருவாக வெற்றிலை பாக்கு வைத்தும் குலதெய்வத்தை மனமுருகி வழிபடுவது குடும்பத்திற்குத் தலைமுறை கடந்த நன்மைகளை தரும்.

Read More : பினாமி பெயரில் குவாரிகள்..!! அமைச்சர் ஆதவ் சொன்ன அந்த வார்த்தை..!! கொந்தளித்த திமுக MLA-க்கள்..!!

Next Post

இந்த எளிய பரிகாரம் செய்தால் தடையின்றி பணவரவு வந்து சேரும்..!! ஆன்மிக வல்லுநர்கள் தரும் டிப்ஸ்..!!

Wed Aug 26 , 2026
ஒரு மனிதன் கடினமாக உழைத்துச் சம்பாதிக்கும் பணம் நிலைத்து நிற்கவும், தடைபட்ட பணவரவு தடையின்றி கிடைக்கவும், கைவிட்டுப்போன கடன் தொகைகள் திரும்ப வரவும் மகாலட்சுமியின் அருளோடு குரு மற்றும் சுக்கிர பகவான்களின் ஆசியும் மிகவும் அவசியமாகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, பெருஞ்செல்வத்திற்கும் கோடீஸ்வர யோகத்திற்கும் அதிபதியாகக் குரு பகவானும், அன்றாட பணப்புழக்கம் மற்றும் ஆடம்பர, மகிழ்ச்சியான வாழ்விற்குரிய காரகராக சுக்கிர பகவானும் விளங்குகின்றனர். இவ்விரு கிரகங்களின் அருளையும் ஒருசேரப் பெற எளிய […]
zodiac money

You May Like