ஜோதிடத்தின்படி, கிரகப் பெயர்ச்சிகள் எப்போதும் ஆர்வத்திற்கும் மாற்றங்களுக்கும் வழிவகுக்கும். பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசியில் ஒரு அரிய நிகழ்வு நடக்கிறது. கிரகங்களின் ராஜாவான சூரியன், அறிவுசார் புதன், மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு அதிபதியான சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் கும்ப ராசியில் ஒன்றாக வருகின்றன. ஜோதிடத்தின்படி இந்த ‘திரிகிரஹி யோகம்’ மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது, மேலும் இது பன்னிரண்டு ராசிகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சுப பலன்களைப் […]

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியானது ‘விஜய ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டில், இந்த முக்கியமான விரத நாள் பிப்ரவரி 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. ஆன்மீக ரீதியாக இந்த நாளுக்கு மிகப்பெரிய மகத்துவம் உண்டு. இந்த நாளில் முழு மனதுடன் மகா விஷ்ணுவை வழிபட்டு, அவருக்குப் பிடித்தமான மஞ்சள் நிறப் பொருட்களை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினால், நம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியும் […]

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள ‘திருவார்பு ஸ்ரீகிருஷ்ணர் கோவில்’, இந்திய ஆன்மீக வரைபடத்தில் மிகவும் வியக்கத்தக்க மற்றும் தனித்துவமான ஒரு வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது. சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இக்கோவில், வெறும் வழிபாட்டிடம் மட்டுமல்ல; அங்கு நிலவும் வினோதமான நடைமுறைகளால் ஒரு அதிசயக் கூடாரமாகவும் பார்க்கப்படுகிறது. மற்ற கோவில்களில் தெய்வங்கள் தியான நிலையிலோ அல்லது சாந்த நிலையிலோ இருப்பதாகக் கருதப்படும் சூழலில், இக்கோவில் மூலவர் மட்டும் எப்போதும் ‘பசியோடு’ […]

வைணவ பக்தர்களின் ஆகச்சிறந்த ஆன்மீக கனவு என்பது, பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களையும் வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் சென்று தரிசிப்பதாகும். 105 திருத்தலங்கள் பாரத தேசத்திலும், ஒன்று நேபாளத்திலும், மீதமுள்ள இரண்டு விண் உலகிலும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. கால மாற்றத்தாலும், உடல்நிலை மற்றும் பொருளாதாரச் சூழல்களாலும் அனைத்துத் தலங்களுக்கும் நேரில் செல்வது பலருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அந்தப் பெருங்கனவை நனவாக்கும் ஒரு உன்னத […]

இந்திய பொருளாதாரம் மற்றும் நெறிமுறைகளின் தந்தை என்று அழைக்கப்படும் ஆச்சார்ய சாணக்கியர், மனித வாழ்க்கை எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை வழங்கினார். சாணக்கியர் எழுதிய சாணக்கிய நிதி என்ற புத்தகத்தில், ஒரு நபரின் அன்றாட வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு நபரின் இயல்பே அனைத்திற்கும் காரணம் என்று சாணக்கியர் கூறினார். ஒருவர் பணக்காரர் ஆகிறார், பெரும் வெற்றியை அடைகிறார். அவர் எல்லா வகையான மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறார். […]

ஜோதிடத்தில், செவ்வாய் ஒன்பது கிரகங்களின் ‘தளபதி’. செவ்வாய் சக்தி, தைரியம் மற்றும் செயல்திறனைக் குறிக்கிறது. தைரியம், வீரம், கோபம், பிடிவாதம் மற்றும் தலைமைத்துவ குணங்கள் செவ்வாய் கிரகத்தால் ஏற்படுகின்றன. இது நிலம் (ரியல் எஸ்டேட்), அறுவை சிகிச்சை, பொறியியல், இராணுவம் மற்றும் காவல்துறை ஆகிய துறைகளுக்கு பொறுப்பாகும். செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகத்தின் அதிபதி. இது மகரத்தில் அதன் உயர்ந்த நிலையையும் கடகத்தில் அதன் மிகக் குறைந்த நிலையையும் அடைகிறது. […]

பெருமாள் என்றாலே நம் நினைவுக்கு வருவது சங்கு, சக்கரமும், அவரின் கருணை பொங்கும் முகமும்தான். ஆனால், சிவபெருமானைப் போலவே தனது திருமுடியில் பிறைச் சந்திரனைச் சூடிக்கொண்டு, பக்தர்களுக்கு அபயமளிக்கும் ஒரு அதிசய திருக்கோலம் தமிழகத்தில் உண்டு. 108 திவ்ய தேசங்களில் 25-வது திருத்தலமாகப் போற்றப்படுவது ‘தலைச்சங்காடு’. பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட எண்ணற்ற சங்குகளில், மகாவிஷ்ணுவின் கையில் குடிகொண்டிருக்கும் “பாஞ்சஜன்யம்” என்னும் தலைசிறந்த சங்கு அவதரித்த இடமே இதுவாகும். அதனால்தான் இந்த […]

நாம் எத்தனை இஷ்ட தெய்வங்களை மனதார வழிபட்டாலும், அந்த வழிபாட்டின் பலன்கள் நம்மை முழுமையாக வந்தடைய குலதெய்வம் இன்றியமையாதது. வாழ்க்கையில் ஏற்படும் தொடர் தடைகள், எதிர்பாராத அசுப நிகழ்வுகள் மற்றும் மனக்கவலைகளுக்கு குலதெய்வத்தின் அருள் குறைபாடே முக்கிய காரணமாக ஆன்மீக பெரியோர்களால் சொல்லப்படுகிறது. அத்தகைய குலதெய்வத்தை நம் இல்லத்திலேயே நிரந்தரமாக குடியிருக்க செய்யவும், அவர்களின் முழுமையான ஆசியை பெறவும் சில எளிய வழிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். குலதெய்வக் கோவிலுக்குச் […]

சனியின் ஆட்சி பெற்ற கும்ப ராசியில் பிப்ரவரி 23 ஆம் தேதி செவ்வாய் நுழைவார். சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் மீண்டும் கும்ப ராசிக்குள் நுழைவார். இந்த செவ்வாய் பெயர்ச்சி இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு சிறப்பு நன்மைகளைத் தரும். அந்த ராசிகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். ஜோதிடத்தில் செவ்வாய் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளார். ஆளும் கிரகமாகக் கருதப்படும் செவ்வாய் கிரகத்தின் ஒவ்வொரு பெயர்ச்சியும் பன்னிரண்டு […]

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி போந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலில், ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர். கோயிலில் உள்ள முருகன் சிலை நேற்று மதியம் 12 மணியளவில் கண் திறந்ததாக கூறப்படுகிறது.. இந்த தகவல் தீயாய் பரவியது, பலரும் அந்தக் கோயிலில் குவியத் தொடங்கினர். பக்தர்கள் பலரும் மகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன், முருகனை தரிசிக்க கோவிலில் குவிந்ததால், இந்த கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.. சிலை […]