வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றத்தின் போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். தற்போது சனி பகவான் வக்ர நிலையில் கும்ப …
ஆன்மீகம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
இது இந்துக்களின் முக்கிய ஸ்தலம். தனது ஆயுட்காலத்திற்குள் ஒருமுறையாவது காசி சென்று வர வேண்டுமென்று விரும்புவர். இந்த காசி தலமானது உத்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் இருபுறங்களில் வாரணா, ஹசி என்ற கங்கை நதிகள் ஓடுவதால் இதற்கு வாரணாசி என்று பெயர் வந்தது. ஒவ்வொரு சிவபக்தனும் இங்கு வந்து உயிர் துறப்பதை பாக்கியமாக கருதுவர். இங்கு இறக்கும் …
நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டியில் இயற்கை எழில் மிகுந்த மலை மீது அழகுற அமைந்துள்ளது இந்த கந்தகிரி பழனி ஆண்டவர் திருக்கோயில். 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் பழனி மலையில் உள்ளது போலவே முருகபெருமான் ஆண்டி கோலத்தில் இருப்பதால் ‘பழனி ஆண்டவர்’ என்றே அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் மூலவரான பழனி ஆண்டவரை வழிபட்டால் விரைவில் திருமணமாகும் என்பதும், முருகனுக்கு …
விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்டுள்ளார் மற்றும் தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார்.108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் திருமழிசை ஆழ்வார், திருநங்கை ஆழ்வார், துப்பூர் வேதாந்த தேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பது இதன் தனிச்சிறப்பு.கனகவள்ளி அம்மையார், கணேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், …
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் முத்துப்பந்தல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிரமாண்டமான முத்துப்பல்லக்கு விழா நடந்தது. கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், சோழ மன்னர்களின் காவல் தெய்வமான துர்கை வடக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு எட்டு …
திருப்பதி ஏழுமலையானை செப்டம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் 21ம்தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆர்ஜித சேவாக்கள் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்கான டிக்கெட்டுக்கள் முன்கூட்டியே ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. குறிப்பாக சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவாக்களுக்கான டிக்கெட்டுகள் பெற தேவஸ்தான வெப்சைட்டில் பதிவு செய்து கொள்ளவேண்டும். அதில் பதிவு …
ஜம்மு-காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகை உள்ளது. இப்பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். அப்படி இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை 1ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31 வரை நடக்க உள்ளது. அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் …
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த கம்பிளியம்பட்டி அருகே அக்கரைபட்டியில் காளியம்மன், ஞானவிநாயகர், கன்னிமார், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, சாமி சாட்டுதல் மற்றும் கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல் நிகழ்ச்சியுடன் வழிபாடு தொடங்கியது. இதையொட்டி காலை மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும், பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். திருவிழாவின் …
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில், ஆண்டுதோறும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் …
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் ரூபாய் 52 லட்சத்து 07 ஆயிரத்து 983 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 223 கிராம், வெள்ளி 2 கிலோ 780 கிராம் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.
திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். …