fbpx

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் விளையாடிவருகிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. ஏற்கனவே நடந்த 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.…

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. முதலில் பேட்டிங் …

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் விலகியுள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. நியூசிலாந்து அணியில் ஒரு நாள் போட்டியில் கேப்டனாக டாம்லாதமும், டி20 போட்டி தொடரில் சான்ட்னரும் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான 3 …

விபத்திற்கு பின்னர் முதன்முறையாக ரிஷப் பண்ட் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கடந்த மாதம் 30ஆம் தேதி கார் விபத்தில் சிக்கினார். விபத்தில் படுகாயம் அடைந்த அவர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் உதவியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டேராடூன் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, விமானம் …

தோனி பாணியில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த விராட் கோலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்தியா நேற்று 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக …

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளை அடக்கி, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் முதலிடம் பிடித்தார்.  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அழகுபேச்சி என்ற மாணவி தனது காளையை களத்தில் அவிழ்த்துவிட்ட போது, மாடு பிடி வீரர் விஜய் அதனை  மிக அழகாக அடக்கி பரிசுகளை வென்றார். காளை தோற்றது என்ற கவலையுடன் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவியை …

ஒடிசாவில் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த கிரிக்கெட் வீராங்கனை வனப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஒடிசாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ராஜஸ்ரீ ஸ்வைன் (26) கடந்த 11ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது பயிற்சியாளர், கட்டாக்கில் உள்ள மங்களபாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் …

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு ஆக்சிஜன் பொருந்திய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று வார சிறைவாசத்திற்குப் பிறகு மெக்சிகோவில் இருந்து லண்டனுக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக லலித் மோடி தனது உடல்நிலை குறித்த …

ஆடவர் உலக கோப்பை ஹாக்கி-2023 போட்டி ஒடிசாவில் இன்று தொடங்குகிறது.

2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்துள்ளது. கடந்த 2018இல் நடந்த உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. அதன்பின்னர் கொரோனா …

ஜிம்வாப்வே மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த பயிற்சியாளர் சினிகிவே எம்போபு (37) திடீரென காலமானார். இரண்டு மகளிர் உலகக் கோப்பை போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்கு பயிற்சியளித்த இவர், வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என கூறப்படுகிறது. திடீரென அவர் நிலை தடுமாறியதாகவும், பின் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி …