நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சார்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000 விதம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில்; விளையாட்டுத் துறையில் சர்வதேச / தேசிய தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சார்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000/- விதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. […]

டி.என்.பி.எல். தொடரின் 23-வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடந்து வருகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மதுரை அணி முதலில் களமிறங்கியது. திருச்சி அணியின் துல்லிய பந்துவீச்சினால் மதுரை அணி முன்னணி வீரர்களை இழந்து தத்தளித்தது. அந்த அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு […]

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய திருப்பூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், […]

லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற 371 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பென் டக்கெட்டின் 149 ரன்களின் அற்புதமான சதத்தின் அடிப்படையில், இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து […]

கிரிக்கெட்டர் ரிங்கு சிங் – சமாஜ்வாடி எம்.பி ப்ரியா சரோஜா இருவருக்கும் நவம்பர் 19ல் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திருமணம் தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்டர்களில் ஒருவராக இருப்பவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ரிங்கு சிங் (வயது 27). இந்திய அணிக்காக 33 சர்வதேச டி20 போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் இந்தியாவின் இளம் எம்பியான சமாஜவாதி […]

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் இடது கை சுழற்பந்து வீச்சாளருமான திலீப் தோஷி மாரடைப்பால் காலமானார். இவருக்கு பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார். திலீப் தோஷி நேற்று (திங்கள்) லண்டனில் காலமானார். அவருக்கு வயது 77. பல தசாப்தங்களாக லண்டனில் வசித்து வந்த திலீப் தோஷி, மாரடைப்பால் இறந்தார். அவரது மரணச் செய்தி கிரிக்கெட் […]

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில், லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில், ரிஷப் பந்த் வரலாற்றில் தனது பெயரை பொறித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அபூர்வமான சாதனையை அவர் நிகழ்த்தினார் . அதாவது போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து, செம்மையான படைப்பு மூலம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். சிவப்பு பந்து (red-ball cricket) போட்டிகளில் இது அவரின் மிக முக்கியமான சாதனைகளில் […]

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்து தோனியின் இரண்டு சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 20ம் தேதி தொடங்கிய டெஸ்ட் தொடர், ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி 5 நாட்கள் […]

கிரிக்கெட் விளையாடும் விதிகளில் ஐசிசி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டைத் தொடர்ந்து, இப்போது ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளிலும் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஜூலை முதல் ஒருநாள் மற்றும் டி20 ஆட்ட விதிகளில் மாற்றங்கள் காணப்படும். ஜூலை 2 முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலும், ஜூலை 10 முதல் டி20 கிரிக்கெட்டிலும் இந்த மாற்றம் நிகழவுள்ளது. ஆட்ட விதிகளை மாற்றுவதன் மூலம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையில் […]