2025 ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் சீனாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் பைனலில் நடப்பு சாம்பியனான தென்கொரியாவை எதிர்கொள்கிறது. ஹாக்கி ஆசிய கோப்பை 2025 தொடரின் கடைசி சூப்பர் ஃபோர்ஸ் சுற்று போட்டி நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. ராஜ்கிர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மென் இன் ப்ளூ அணி 7-0 என்ற கணக்கில் சீன அணியை வீழ்த்தி, இந்தியா இறுதிப்போட்டிக்கு […]

சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர். அவர் நீண்ட காலமாக இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரராக இருந்தார். சச்சின் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து குவித்துள்ளார். மும்பையில் சொத்துக்கள் தவிர, லண்டனிலும் அவருக்கு ஒரு சொத்து உள்ளது. அவருக்கு பல சொகுசு கார்கள் உள்ளன. சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகின்றன. அவர் இன்னும் விளம்பரங்களில் தோன்றுகிறார், […]

லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக கடைசியாக சொந்த மண்ணில் விளையாடவுள்ள நிலையில், பயிற்சியின் போது கண்ணீர் விட்டு அழுத உணர்ச்சிப்பூர்வமான தருணம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 38 வயதான மெஸ்ஸி, தனது கால்பந்து வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ளார், அடுத்த ஆண்டு FIFA உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் தேசிய அணியிலிருந்து விடைபெறக்கூடும் என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன. இந்தநிலையில், மெஸ்ஸி மற்றும் அவரது அணியினர், FIFA உலகக் கோப்பை […]

சர்வதேச ‘டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் உலக சாதனை படைத்துள்ளார். சார்ஜாவில் நேற்று நடந்த முத்தரப்பு ‘டி-20’ தொடரின் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற எமிரேட்ஸ் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு சிதிக்குல்லா அடல் (54), ஜத்ரன் (63), ஓமர்சாய் (20) கைகொடுக்க, 20 ஓவரில் 188/4 ரன் எடுத்தது. […]

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் டெஸ்ட் சுற்றுப்பயணம், ஆஷஸ் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக 35 வயதான ஸ்டார்க் கூறினார். ஜூன் 2024 இல் இந்தியாவுக்கு எதிராக தனது கடைசி டி20 போட்டியில் விளையாடினார். “டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் எனது முன்னுரிமையாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்காக நான் விளையாடிய […]

புரோ கபடி லீக் தொடரின் 12வது சீசன் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெள்ளிகிழமை தொடங்கியது. இந்த புதிய சீசன் நான்கு நகரங்களான விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ளது. நான்கு கட்டங்களில் நடைபெறும் இந்த சீசன், விசாகப்பட்டினத்தில் ஆகஸ்ட் 29-செப்டம்பர் 11 வரையிலும், ஜெய்ப்பூரில் செப்டம்பர் 12-28 வரையிறும், சென்னையில் செப்டம்பர் 29-அக்டோபர் 12 வரையிலும், டெல்லியில் அக்டோபர் 13-24 வரையிலும் நடைபெறுகிறது. PKL 2025-ல் போட்டி வடிவம் […]

ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரான லலித் மோடி இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைவதைக் காணலாம். இந்த வீடியோ 2008 ஆம் ஆண்டு ஐபிஎல்லின் முதல் சீசனில் எடுக்கப்பட்டது, அப்போது மும்பை இந்தியன்ஸைச் சேர்ந்த ஹர்பஜன் சிங்கும் கிங்ஸ் லெவன் […]

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் சீனியர் பிரிவில் அஜயா பாபு வல்லூரி மற்றும் ஜூனியர் பிரிவில் பெடபிரதா பராலி ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. அதன்படி நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் அஜயா பாபு வல்லூரி மற்றும் பெடபிரதா பராலி ஆகியோர் தங்கப்பதக்கங்களை வென்றனர். தேசிய விளையாட்டு சாம்பியனான அஜயா பாபு, சீனியர் ஆண்கள் 79 கிலோ பிரிவில் […]

இந்திய அணி நட்சத்திர தொடக்க வீரரும் டெஸ்ட் கேப்டனுமான சுப்மன் கில் எதிர்பாராத வைரஸ் காய்ச்சல் காரணமாக துலீப் டிராபியிலிருந்து விலகியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு அவர்கள் இருவர் உட்பட 15 பேர் கொண்ட அணி வீரர்களின் […]