டைமண்ட் லீக் இறுதிப்போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், 85.01 மீ., தூரம் ஈட்டி எறிந்து இந்தியா வீரர் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்தார். ஜெர்மனியின் வெப்பர், 90.51 மீ., எறிந்து அபார சாதனையுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் டைமண்ட் லீக்கின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெப்பர், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ட்ரினிடாட் & டொபாகோ வீரர் கெஷோர் வால்கட், கிரெனடாவின் […]

அகமதாபாத்தில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் 2025 தொடரின் பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. வரும் 30ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில், 30 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியின் முதல் நாளில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்று […]

இந்தியாவின் முன்னணி ஃபான்டஸி விளையாட்டு தளமான Dream11-இன் தாய் நிறுவனமான Dream Sports, ஆன்லைன் கேமிங் தடையை தொடர்ந்து, புதிய தனிப்பட்ட நிதி செயலியான Dream Moneyயை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஃபான்டஸி விளையாட்டு தளமான Dream11-இன் தாய் நிறுவனமான Dream Sports, புதிய தனிப்பட்ட நிதி செயலி ஒன்றை Dream Money என்ற பெயரில் சோதனை செய்து வருகிறது என Moneycontrol வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. […]

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பிக்கைக்குரிய நாயகராக இருந்த சேதேஷ்வர் புஜாரா, இன்று (ஆகஸ்ட் 25) அனைத்து வகை கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். பல ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்த புஜாரா, கடந்த சில காலமாக அணியில் இடம் பெறவில்லை. பிசிசிஐ புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை முன்னிலைப்படுத்தி, புஜாராவை அணிக்கு தேர்வு செய்யவில்லை. 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் […]

ஆசியக் கோப்பை தொடங்க இன்னும் 16 நாட்களே இருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஜெர்சி ஸ்பான்சராக இருந்த Dream11 நிறுவனம், தனது ஒப்பந்தத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றம், கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா’ (Promotion and Regulation of Online Gaming Bill) நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டது. அந்த மசோதா ஆன்லைன் ஃபாண்டஸி ஸ்போர்ட்ஸ் […]

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் விளையாட்டுத் துறையில், குறிப்பாக உண்மையான பணத்தை உள்ளடக்கிய விளையாட்டுகள் (Real Money Games) ஏற்படுத்தும் சமூகப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ‘ஆன்லைன் விளையாட்டுகளை மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா, 2025’ எனப் பெயரிடப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21, 2025) நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் சட்டம், குடியரசுத் […]

2025 ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய அணிகளுடன் இணைந்து இந்தியா குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ளது. பிராந்தியப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் அறிவித்துள்ளார். முதல் முறையாக டி20 போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியல் விவரங்களை அறிந்துகொள்ளுங்கள். ஆசிய கோப்பை ‘டி-20’ கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 9-28) நடக்க உள்ளது. டி20 […]

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மானு பாகர் இரண்டு வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. 10 மீ., ஏர் பிஸ்டல் அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியா சார்பில் மனு பாகர், சுருச்சி, பாலக் குலியா இடம் பெற்ற அணி பங்கேற்றது. மொத்தம் 1730 புள்ளி எடுத்து, வெண்கலம் வென்றது. […]

சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு 20.08.2025 அன்று வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 22.08.2025 முதல் 12.09.2025 வரை பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவினர், மாற்றுதிறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ளது. பள்ளி பிரிவிற்கு 01.01.2007 […]