இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் குற்றசாட்டுகளை விசாரிக்க குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து, அதுகுறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, மத்திய அரசின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை திரும்பப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து பிரபல மல்யுத்த […]

இந்திய டி20 கிரிக்கெட் அணியில் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. முதல் 2 போட்டிகளில் வெற்றி கண்டு இந்தியா தொடரை வென்றுவிட்டது. இதனையடுத்து, இரு அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த முறையும் சீனியர் வீரர்களான விராட் கோலி, […]

முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த டென்னிஸ் விளையாட்டு வீரர் நிக் கிர்கியோஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுத்த புகைப்படத்தை தனது சமூகத்தை பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நிக் கிர்கியோஸ் ஜனவரி 16 அன்று, டென்னிஸ் சார்பு கிராண்ட் ஸ்லாமில் இருந்து விலகுவதாக அறிவித்தார், முழங்கால் பிரச்சினை காரணமாக 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் போட்டியிடுவதைத் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று அறுவை சிகிச்சைக்கு தயாராகும் வீடியோவை தனது […]

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் விளையாடிவருகிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. ஏற்கனவே நடந்த 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக நேற்றைய தினம் இந்திய அணி […]

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்களை […]

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் விலகியுள்ளார். நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. நியூசிலாந்து அணியில் ஒரு நாள் போட்டியில் கேப்டனாக டாம்லாதமும், டி20 போட்டி தொடரில் சான்ட்னரும் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை முதல் 24ஆம் தேதி வரை […]

விபத்திற்கு பின்னர் முதன்முறையாக ரிஷப் பண்ட் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கடந்த மாதம் 30ஆம் தேதி கார் விபத்தில் சிக்கினார். விபத்தில் படுகாயம் அடைந்த அவர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் உதவியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டேராடூன் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, விமானம் மூலம் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பண்ட், அனுமதிக்கப்பட்டு அங்கு […]

தோனி பாணியில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த விராட் கோலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்தியா நேற்று 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றி இலங்கையை வாஷ் அவுட் செய்தது. நேற்றைய போட்டிகளில் விராட் கோலி மிக […]

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளை அடக்கி, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் முதலிடம் பிடித்தார்.  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அழகுபேச்சி என்ற மாணவி தனது காளையை களத்தில் அவிழ்த்துவிட்ட போது, மாடு பிடி வீரர் விஜய் அதனை  மிக அழகாக அடக்கி பரிசுகளை வென்றார். காளை தோற்றது என்ற கவலையுடன் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவியை அழைத்து அவரிடம் தான் வென்ற பரிசுகளை வழங்கிய விஜய், அவரை உற்சாகப்படுத்தி அனுப்பி […]

ஒடிசாவில் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த கிரிக்கெட் வீராங்கனை வனப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ராஜஸ்ரீ ஸ்வைன் (26) கடந்த 11ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது பயிற்சியாளர், கட்டாக்கில் உள்ள மங்களபாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் ராஜஸ்ரீயை தேடி வந்தனர். இந்நிலையில், குருதிஜாதியா வனப்பகுதியில் உள்ள மரத்தில் ராஜஸ்ரீ தூக்கில் […]