2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என ஃபிடே (FIDE) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட போட்டிக்கான நகரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 2025 உலகக் கோப்பையில் 206 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா கடைசியாக இந்த நிகழ்வை 2002-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடத்தியது. அப்போது, சதுரங்க ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டும், போட்டி நாக் அவுட் முறையில் நடைபெற […]

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 2025-26ம் ஆண்டில் நடத்தப்படவிருக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 37 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, […]

கிரிக்கெட்டில் சில போட்டிகள் என்றென்றும் நினைவாகிவிடும். போட்டியுடன், சில வெற்றி ஷாட்களும் மக்களின் மனதில் பதிந்துவிடும். ஒரு வீரரின் இன்னிங்ஸ் அல்லது ஒரு பந்து வீச்சாளரின் அற்புதமான விக்கெட் அல்லது ஒரு பீல்டரின் கேட்ச். இதுபோன்ற பல தருணங்கள் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலும் வந்துள்ளன. சச்சின் டெண்டுல்கரின் பேட்டில் இருந்து 100வது சதம், மகேந்திர சிங் தோனியின் பேட்டில் இருந்து உலகக் கோப்பையை வென்றது அல்லது விராட் கோலியின் பேட்டில் […]

கடந்த ஜூன் 4ஆம் தேதி RCB கிரிக்கெட் அணியின் ஐபிஎல் வெற்றி அணிவகுப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் நிர்வாகமும், விராட் கோலியின் வீடியோ அழைப்பே முக்கிய காரணம் என்று கர்நாடக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் RCB அணி கைப்பற்றும் முதல் பட்டம் […]

கிரிக்கெட் 1900-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் மட்டும் இடம் பெற்றது. அதில் இங்கிலாந்து அணி பிரான்சை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது. அதன் பிறகு கழற்றிவிடப்பட்ட கிரிக்கெட் தற்போது 128 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கால்பதிக்கிறது. 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி மீண்டும் இணைக்கப்பட்டிருப்பது, உலகளாவிய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல விளையாட்டுப் போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை ஏற்பாட்டாளர்கள் திங்கள்கிழமை அறிவித்தனர். குறிப்பாக, கிரிக்கெட் […]

உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், முதல்முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்ற நிலையில், நடிகர் விஜய் ஸ்டைலில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர். […]

இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் 2005 ஆம் ஆண்டு, தனது 15 வயதில் ஆசிய விளையாட்டு போட்டியை வென்றார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இது ஒலிம்பிக்கில் அவரது சிறந்த செயல்திறன் ஆகும். சாய்னா தனது வாழ்க்கையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார், அவற்றில் 2 பெண்கள் ஒற்றையர் பிரிவிலும், ஒன்று கலப்பு இரட்டையர் பிரிவிலும் […]

உலகெங்கும் கார் ரேஸுக்கான ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வருகிறார்கள். பல முக்கிய நாடுகளிலும் கார் ரேஸ்கள் நடந்து வருகிறது. இதேபோல் நம்ம சிங்கார சென்னையிலும் பார்முலா கார் போட்டிகள் நடக்கும். அதாவது, பார்முலா ரேஸ்கள் பொதுவாகப் பிரத்தியேக டிராக்குகளிலும் நடக்கும் ஸ்ட்ரீட் சர்க்யூட்களிலும் நடக்கும். கார் ரேஸில் உச்சமாகக் கருதப்படுவது தான் ஃபார்முலா 1. சர்வதேச அளவில் தலைசிறந்த டிரைவர்கள், நிறுவனங்கள் இருக்கும் ஒரு ரேஸ். இதில் உலகெங்கும் […]