இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு […]

பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரர் 35 வயதைத் தாண்டும்போது, ​​ஓய்வு பெறுவதற்கான அழுத்தமும் அவர் மீது அதிகரிக்கத் தொடங்குகிறது. 40 வயதிற்குள், பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்றுவிடுவார்கள். ஓய்வு பெறுவதற்கு வயது இல்லை என்றாலும், ஒரு வீரர் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம், ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக ஏதேனும் வயது வரம்பு உள்ளதா? 18 வயதுக்குட்பட்டவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருக்க முடியுமா? பதிலை இங்கே […]

கிரிக்கெட் விளையாட்டின் அசகாய சூரன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் இன்று. அவருக்கு வயது 44. ராஞ்சியில் இருந்து தன் கனவை தேடி புறப்பட்டு வந்த தோனி, பின்னாளில் கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்களின் கனவுகளை மெய்ப்பிக்க செய்தார். இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமை தோனியையே சேரும். இன்றளவும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார் தோனி. கிரிக்கெட் விளையாடும் இன்றைய காலத்து […]

பர்மிங்காம் டெஸ்டில் இந்தியாவின் வெற்றியால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்தை இந்திய அணி தோற்கடித்துள்ளது. ஆகாஷின் அபார பந்துவீச்சால், 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் இங்கிலாந்தை வெறும் 271 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது இந்திய அணி . இந்த போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆகாஷ் […]

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் தொடர் முடிவுக்கு வந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஒவ்வொரு அணியும் தலா 7 லீக் ஆட்டங்களில் விளையாடின. இதையடுத்து லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடம் பெற்ற சேப்பாக்கம், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து, முதல் குவாலிபையர் போட்டியில் சேப்பாக்கை வீழ்த்திய திருப்பூர் அணி நேரடியாக […]

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸையும் சேர்த்து ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (‘ஆண்டர்சன் – சச்சின் டிராபி’) பங்கேற்கிறது. லீட்சில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்ஹாமின், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587, இங்கிலாந்து 407 ரன் […]

குரோஷியாவின் ஜாக்ரெப்பில் நேற்று நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2025 ரேபிட் & பிளிட்ஸ் போட்டியில் உலக சாம்பியனும், இந்திய வீரருமான டி. குகேஷ் ரேபிட் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். போலந்தின் ஜான்-க்ர்சிஸ்டோஃப் டுடா மற்றும் நார்வே கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை முந்தி 14 புள்ளிகளுடன் லீடர்போர்டில் முதலிடத்தைப் பிடித்தார். 19 வயதான நடப்பு உலக சாம்பியனான இவர், ஆரம்ப தோல்வியிலிருந்து மீண்டு, தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளைப் பெற்று, மேக்னஸ் […]

டிஎன்பிஎல் தொடரின் குவாலிபையர் 2வது போட்டியில் சேப்பாக் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 2025 சீசன் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. அதில் லீக் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி சோழாஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. லீக் போட்டிகளில் தோல்விகளையே சந்திக்காத சேப்பாக் அணி, பிளே ஆஃப் சுற்றில் ஜூலை ஒன்றாம் […]

விளையாட்டுத் துறையில் சர்வதேச / தேசிய தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சார்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000/- விதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; விளையாட்டுத் துறையில் சர்வதேச / தேசிய தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சார்ந்த […]